கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலைக்கட்டணம் தடை

#Canada #Ban #Highway #Canada Tamil News
Mugunthan Mugunthan
2 months ago
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலைக்கட்டணம் தடை

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வதற்கான கட்டணம் அறவீடு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. மாகாணத்தின் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் கட்டண அறவீட்டுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

 ஒன்றாரியோ மாகாண போக்குவரத்து அமைச்சர் பிராம்பீட் சர்காரியா கட்டண அறவீட்டு தடை தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பிலான சட்ட மூலமொன்று அடுத்த வாரம் சட்டமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

images/content-image/1708331903.jpg

 தற்பொழுது அறவீடு செய்யப்பட்டு வரும் கட்டணங்களை தவிர்ந்த புதிய கட்டணங்கள் எதனையும் அறவீடு செய்வதனை தடுக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. எனினும், 407ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்வதற்காக தொடர்ந்தும் கட்டணம் அறவீடு செய்யப்படும் எனவும் தனியார் நிறுவனமொன்று கட்டணத்தை அறவீடு செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதனால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்தது என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.