கனடாவில் வீட்டு வாடகை தொடர்ச்சியாக அதிகரிப்பு
#Canada
#Rent
#Canada Tamil News
#House
Mugunthan Mugunthan
1 year ago

கனடாவில் வீட்டு வாடகைத் தொகை அதிகரித்துள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் முதல் வாடகைத் தொகை 2196 டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வாடகைத் தொகை கடந்த ஆண்டை விடவும் இந்த இது 10 சதவீத அதிகரிப்பு எனப் பதிவாகியுள்ளது.
Rentals.ca என்ற இணைய தளம் இது தொடர்பிலான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கேள்வி அதிகரிப்பு காரணமாக கனடாவில் வீடுகளின் வாடகைத் தொகை தொடர்ச்சியாக அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் மிகவும் அதிகமான வாடகைத் தொகை பதிவாகும் நகரமாக வான்கூவார் கருதப்படுகின்றது.
இங்கு ஒரு அறை கொண்ட வீடுகளின் வாடகை மிகவும் வேகமாக அதிகரிக்கிறது.
வான்கூவாரில் ஒரு படுக்கை அறையைக்கொண்ட வீடு ஒன்றின் சராசரி வீட்டு வாடகைத் தொகை 2683 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



