பாடசாலைகளில் மாணவர்கள் கையடக்க தொலைபேசி உபயோகிக்க தடை
இங்கிலாந்து பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளும் மொபைல் போன்களை உபயோகிக்க புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.
இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கருத்து தெரிவித்தார். அதில் அவர் கூறியதாவது: முக்கியமான உரையாடலின் போது மொபைல் போன் தொடர்ந்து ஒலிப்பது எரிச்சலூட்டுகிறது.
பல பள்ளிகளில் மொபைல் போன் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யாமல் உள்ள பள்ளிகளுக்கு உதவ நமது கல்வி துறை புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
பல ஆசிரியர்கள், தங்களால் வகுப்புகளில் கவனம் செலுத்த முடிவதில்லை என புகார் அளித்தனர். மொபைல் போன்கள் வகுப்புகளில் கவனச்சிதறலை தூண்டுகிறது.
எங்கெல்லாம் வகுப்புகளில் மொபைல் போன் தடை செய்யப்பட்டுள்ளதோ அங்கு மாணவர்களுக்கு கற்றலுக்கான சூழ்நிலை நன்றாக உள்ளது.
எனவே புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் அவர்களுக்கு உரிமையுள்ள கல்வியை பெற அனைத்து சூழலையும் நாம் உருவாக்க வேண்டும்.