கனடாவிலிருந்து புறப்பட்ட விமானமொன்றிற்கு நடுவானில் மிரட்டல்

#Flight #Canada #AirCraft #Canada Tamil News #Threat
Mugunthan Mugunthan
3 months ago
கனடாவிலிருந்து புறப்பட்ட விமானமொன்றிற்கு நடுவானில் மிரட்டல்

கனடாவிலிருந்து அமெரிக்கா சென்ற விமானத்தினை நடுவானில் வைத்து அதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஏர் கனடா விமானமானது திங்கட்கிழமை, கனடாவின் ஹாலிஃபாக்ஸிலிருந்து நியூஜெர்ஸியிலுள்ள Newark என்னுமிடம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளை மதியம் 12 மணியளவில், அந்த விமானம் மிரட்டலிற்கு உள்ளானதாக  அமெரிக்க பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

 விமானிகள் அந்த விமானத்தை பாதுகாப்பாக Newark லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்கள். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும். யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். 

பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் விமானத்தினை சோதனை செய்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக எதுவும் கண்டுபிடிக்கப்படாமையால் விமான நிலையம் மீண்டும் அதன் பணிகளை தொடங்கியது.

 என்றாலும், இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.