கிளிநொச்சியில் கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற இருவர் கைது!

#SriLanka #Arrest #Police #Kilinochchi #Cow
Mayoorikka
1 year ago
கிளிநொச்சியில் கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற இருவர் கைது!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை சந்திப் பகுதியில் இரவு நேர காவல் கடமையில் ஈடுபட்ட பொலிஸாரின் வீதிச் சோதனையின் போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 7 எருமை மாடுகளை ஏற்றி வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட கப்ரக வாகனமும் அதன் வாகன சாரதி மற்றும் வாகன உதவியாளர் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

images/content-image/2023/02/1708561232.jpg

 எழு கால்நடைகளும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கால்நடை கொண்டு செல்வதற்கான கால்நடை வைத்தியர் சான்றிதழ் இன்மை மற்றும் வாகனத்தில் கால்நடைகள் ஏற்று செல்லக்கூடியவாறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை உள்ளிட்ட காரணங்களுக்காக இரண்டு சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

images/content-image/2023/02/1708561253.jpg

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் 21.02.2024 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதாக பொறுப்பதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!