சைவ சமய சாஸ்திர சம்பிராதாயங்களின் படி புதிய டிஜிட்டல் உலகிற்கேற்றாற் போல் உருவாக்கப்பட்டுள்ள சைவசமய நடைமுறைகள்
#Hindu
#spiritual
#Law
#Religion
Mugunthan Mugunthan
1 year ago

நாடு முழுவதிலும் இருந்து 70 சாஸ்திர சம்பிராதாயங்களில் கற்றறிந்த பண்டிதர்களைக் கொண்ட குழு, காசி வித்வாத் பரிஷித் அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டது.
இந்த குழுவினர் கடந்த 4 ஆண்டுகளாக பல ஆய்வுகள் செய்து, கலந்து ஆலோசித்த பிறகு புதிய நடைத்தை விதிகளை உருவாக்கி உள்ளனர். ஸ்ரீமத் பகவத் கீதா, ராமாயணம், மகாபாரதம், புராணங்கள் உள்ளிட்டவைகளில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளின் அடிப்படையில் இந்த புதிய இந்து நடத்தை விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அனைத்து இந்துக் கோவில்களிலும் ஒரே மாதிரியான வழிபாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. வழிபாட்டின் போது ஒற்றுமையும், ஒழுக்கமும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
- பெண்களுக்கு சில புதிய உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் மாதவிலக்கு போன்ற சுத்தம் இல்லாத நாட்கள் தவிர்த்து, மற்ற காலங்களில் சில சடங்குகளையும் செய்வதுடன் வேதங்கள் படிக்கும் உரிமையும் புதிதாக வழங்கப்படுகிறது. இதனால் யாகங்கள் போன்ற சடங்குகளை இனி பெண்களும் செய்ய முடியும்.
- இந்திய கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இரவில் திருமணம் செய்யாமல், பகலில் மட்டுமே திருமண சடங்குகளை நடத்தும் புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது.
மேற்கத்திய பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்களை சார்ந்த விஷயங்களை குறைத்து இந்திய மரபுகள், நம்பிக்கைகளை ஊக்குவிப்பதற்காக ஒருவரின் பிறந்தநாளை எப்படி கொண்டாட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.
- விதவை மறுமணங்கள் ஊக்குவிக்கும் முறையும் இந்த புதிய விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
- இன்றைய காலத்தை கருத்தில் கொண்டு 16 வகையான சடங்குகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஒரு இறுதிச் சடங்கில் கலந்த கொள்ள வேண்டிய நபர்களின் எண்ணிக்கை 16 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்த புதிய இந்து நடத்தை விதிகள் அச்சிடப்பட்டு, அந்த பிரதிகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட உள்ளன. மேலும் அடுத்த ஆண்டு நடக்கும் மகாகும்பமேளாவில் புதிய இந்து நடத்தை விதிகளின் நகல்கள் அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது.



