BANvsSL T20 - மூன்றாம் நடுவரின் தீர்ப்பால் சர்ச்சை

#SriLanka #T20 #Cricket #Bangladesh #sports #Umpire
Prasu
8 months ago
BANvsSL T20 - மூன்றாம் நடுவரின் தீர்ப்பால் சர்ச்சை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியின் போது இடம்பெற்ற வித்தியாசமான சம்பவம் ஒன்றின் மீது தற்போது உலகின் கவனம் குவிந்துள்ளது.

ஆட்டத்தின் நான்காவது ஓவரில் பினுரா வீசிய முதல் பந்து சௌமியா சர்க்கரின் துடுப்பாட்ட மட்டையில் பட்டு, விக்கெட் கீப்பர் குசல் மெண்டிஸால் பிடியெடுக்கப்பட்டது.

இதன்போது ஆடுகள நடுவர், இதனை ஆட்டமிழப்பாக அறிவித்த நிலையில், சௌமியா சர்க்கார் அதை மூன்றாவது நடுவரிடம் பரிந்துரைக்கும்படி கூறினார்.

இதன்போது அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பத்தை சோதித்தபோது, ​​அது மட்டையையில் உரசி சென்றது போல் தோன்றியது, ஆனால் மூன்றாவது நடுவர் அதை வெளிப்படுத்திய நேரத்தில் பந்துக்கும் மட்டைக்கும் இடையில் இடைவெளி இருந்ததால் அது ஆட்டமிழப்பு இல்லை என ஆடுகள நடுவருக்கு அறிவித்தார்.

இதன் காரணமாக மைதானத்தில் சற்று பதற்றம் நிலவியதுடன், இலங்கை வீரர்கள் மைதானத்தில் நடுவரின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் காணமுடிந்தது.

 ஆடுகள நடுவரின் தீர்ப்பை பரிசோதிக்க மூன்றாவது நடுவருக்கு ஒரு காரணி தேவை என்பதால், அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பம் மூலம் அது ஆட்டமிழப்பு என உறுதியான நிலையில், மூன்றாவது நடுவர் அளித்த இந்த முடிவு குறித்து கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த சர்ச்சைக்குரிய முடிவு தொடர்பில் முறைப்பாடு செய்ய இலங்கை அணி தீர்மானித்துள்ளது. போட்டி நடுவர் ஊடாக இது தொடர்பான முறைப்பாட்டை அறிவிக்க எதிர்பார்ப்பதாக இலங்கை அணியின் உதவி பயிற்றுவிப்பாளர் நவீட் நவாஸ் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!