வவுனியாவில் இடம்பெற்ற கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவு தினம்
#SriLanka
#Vavuniya
#people
#tribute
Lanka4
1 year ago

வவுனியாவில் கம்பரின் நினைவுதினம் இன்று நகரசபையின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது.
இதன்போது கம்பனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் இலக்கிய சுடர் ஐ.கதிர்காமசேகரம் மற்றும் செல்வி கபிலநாத் அட்சகி ஆகியோரால் சிறப்புரைகளும் ஆற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



