அறக்கொடை அரசன் வாமதேவா தியாகேந்திரன் வரலாறு

#SriLanka #Jaffna #history #Thiyagendran Vamadeva
Mayoorikka
4 months ago
அறக்கொடை அரசன் வாமதேவா தியாகேந்திரன்  வரலாறு

ஈழமணித் திருநாட்டின் " அறக்கொடை அரசன் " என மக்களால் கொண்டாடப்படும் தியாகி அறக்கொடை நிறுவன ஸ்தாபகத் தலைவராய் நான்கு தசாப்த காலமாக பல்லாயிரம் கோடி ரூபா பெறுமதியான அறப்பணிகளை தனது சொந்தப் பணத்தில் இலங்கை மணித் திருநாட்டின் மூவின மக்கள் துயர் துடைக்கும் தியாகி தியாகேந்திரன் வாமதேவாஅவர்களின் வரலாற்றினை நோக்குவோம்.

 யாழ்ப்பாணம் நல்லூர் என்னும் அழகிய ஊர் தன்னில் வாமதேவா சொர்னாம்பிகை தம்பதிகளின் இரண்டாவது புதல்வனாக தர்மவள்ளல் 1951-12-19 ஆம் நாள் பிறந்தார். 

தனது ஆரம்பக் கல்வியினை ஆனைப்பந்தி கணேசா வித்தியாசாலையிலும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை யாழ் சென்யோண் கல்லூரியிலும் உயர்தரத்தினை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கலைப்பிரிவில் கல்வி கற்று சட்டம் பயில்வதற்குத் தெரிவானார். இவர் ஒரு மல்யுத்த வீரராகவும் விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டவராகவும் விளங்குகின்றார். சட்டத் துறையில் பயின்று வரும்வேளையில் கப்பல் தொழில் வாய்ப்பு இவரைத்தேடி வந்தது. 

இதன் காரணமாக இவர் சட்டத்துறையை இடையில் விட்டுவிட்டு கப்பலில் இரண்டாவது அலுவலராகப் பணியாற்றுவதற்குச் சென்றார். கப்பலில் அவர் வேலை பார்த்தவேளையில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. இத்தகைய பிரயாணங்கள் அவருக்குள் சிறுவயதிலிருந்தே இயல்பாக இருந்த பிறருக்குதவுதல், ஏழையின் கண்ணீரைத் துடைத்தல். பொதுவிடயங்களின் பாதுகாப்பிலீடு படுதல் போன்ற எண்ணங்கள் மேலும் வலுப்பெற்றது எனலாம். அமெரிக்கா, ஈரான், கிறீஸ் போன்ற நாடுகளில் பழைய இரும்பு வியாபாரத்தினை ஆரம்பித்து பாடுபட்டுழைத்துச் சிறுகச் சிறுகச் சேமித்து பிறருக்கு உதவும் நிலையினை அடைந்தார். யாழ்ப்பாணத்தில் பலர் கோடீஸ்வரர்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் எல்லோரும் யாழ் மண்ணையும் ஏழை எளியவர்களையும் அரவணைப்பதுமில்லை – உதவுவதுமில்லை. பிறருக்குத வும் எண்ணமும் மனப்பக்குவமும் ஒருசிலருக்குத்தான் உருவாகும். 

அந்தவகையில் தியாகேந்திரா அவர்கள் முன்னிலை பெறுகின்றார். மனதை பக்குவப்படுத்தி பிறருக்குதவும் வகையில் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் ‘தியாகி அறக்கொடை நிறுவனம்’ என்ற பெயரில் அறக்கட்டளை அமைப்பினை உருவாக்கி அதன் தொடராக குழழன ளவைல ஒன்றினை நிறுவி பல இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார். 

இவ் அனைத்துப் பணிகளும் இவருடைய சொந்த நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. அறக்கொடை நிறுவனம் மேற்கொண்ட பணிகள் மந்திகை ஆதார வைத்தியசாலையின் Physiotherapy center பல மில்லியன் ரூபா செலவில் நிர்மானித்துக் கையளிக்கப்பட்டது. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் ஒருகோடிரூபா செலவில் “தியாகேந்திரன் கிளினிக் மையம்” அமைக்கப்பட்டதுடன் புற்றுநோய் சிகிச்சைக் கட்டடம் அமைப்பதற்கென பல லட்சம் ரூபாய்கள் நிதியுதவு செய்யப்பட்டுள்ளது.

images/content-image/2024/05/1716526775.jpg

 வவுனியா ஆதார வைத்தியசாலைக்கு ரூபா முப்பத்தைந்து லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன் அதனைப் பராமரிப்பதற்கு ரூபா பதினைந்து லட்சம் செலிவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கொரோனா நிதியத்திற்கென இரண்டுகோடி ரூபா அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன் வடக்கு, மலையகம், கொழும்பு என நாட்டின் பல பகுதிகளுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ஒருகோடி ரூபா வழங்கப்பட்டது.

 ஸ்தாபகிர்ன் சிந்தனையில் உருவான நாய்கள் சரனாலயம் அரியாலையில் உருவாக்கப்பட்டது. இத்திட்டம் தற்பொழுது நின்று விட்டது. விவசாயச் சங்கங்களின் தேவைக்காக வட்டுக்கோட்டை உப்பு வயல் குளம் இருபது லட்சம் ரூபா நிதியில் புனரமைத்து விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டது.

 யாழ்ப்பாண நகரை அழகுபடுத்தம் திட்டத்தின் கீழ் ஆரியகுளம் புனரமைப்புப் பணியானது மூன்றுகோடி ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

 வடமாகாணத்தில் பொதுமக்களின் பாதுகாப்பற்ற பல கிணறுகள் புனரமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. TCT Children Home 27 பெண் பிள்ளைகளுடன் கடந்த பதினைந்து வருடங்களாக இயங்கி வருவதுடன் அவர்கள் மணவாழ்க்கையில் ஈடுபடும்வரை பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

 பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு IVF சிகிச்சைக்கு பல லட்சம் ரூபா இதுவரையில் உதவியாக செலவிடப்பட்டுள்ளது. பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு பல மில்லியன் ரூபா செலவில் மூக்குக் கண்ணாடி கள் வழங்கப்பட்டுள்ளன.

 தியாகி வீடமைப்புத் திட்டத்தினூடாக பொருளாதாரத்தில் நலிவடைந்த 5 குடும்பங்களுக்கு காணியுடன் வீடும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. சொந்தக் காணியிருந்தும் பொருளாதார வசதி இல்லாத மூவின மக்களுக்கும், வீடு கட்ட முடியாமலிருந்த முப்பது குடும்பங்களுக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்குக் காணிகளும் வழங்கப்பட்டுள்ளன.

 முழுமையாக இரண்டு முன்பள்ளிகள் அமைக்கப்பட்டதுடன் பல வருடங்களாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் சர்வதேச தரத்திலான Tennis Court மற்றும் நுழைவாயில் என்பன வடிவமைத்துக் கொடுக்கப்பட்டது.

 Tennis Court பாடசாலையின் Basket Ball Court ஆறு லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் புனித பொஸ்கோ பாடசாலையின் பார்வையாளர் அரங்கு அமைத்துக் கொடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நுழைவாயில் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

 அரசசேவையில் பணிபுரிபவர்களுக்கு ஐந்து மில்லியன் ரூபா செலவில் அச்சிடப்பட்ட இரண்டாம் மொழிப்பாடமான சிங்களப்பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

 கடந்த பதினைந்து வருடங்களாக தாட்சாஜினி இலவச மருத்துவ சேவை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இலவச போக்குவரத்து வசதி, இலவச மருந்து விநியோகத்துடன் வழங்கப்பட்டு வருகின்றன. ஐம்பது மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன.

 பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு மாதாந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் விளையாட்டுக்களின் வளர்ச்சிக்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அகில இலங்கை ரீதியில் மூவின மக்களையும் சேர்ந்த இருபதாயிரத்திற்கு மேற்பட்ட பயனாளிகள் மாதாந்த உதவித்திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

 தியாகி அறக்கொடை வியாபார நிறுவனத்தில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்குடன் 150 ஊழியர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். கலைஞர்களுக்கு அவர்களது வாழ்க்கையை முன்னேற்றும் உதவித்திட்டமும் வீட்டுத் திட்டத்திலும் உள்வாங்கப்பட்டுள்னர்.

 வட்டார வீதிகள் தூய்மைப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல வயோதிபர்களைவ வீட்டில் வைத்துப் பராமரிப்பதற்கு தொடர்ச்சியான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. வறுமைக்கோட்டின்கீழ் வாழும் சில மருத்துவ தேவைகளுக்கும் சத்திரசிகிச்சைத் தேவைகளுக்கும் நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.

 செவிப்புலன் பாதிக்கப்பட்டு பேச்சாற்றலில் குறைபாடுடையவர்களுக்கு Hearing Solutions மூலமான தீர்வு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தனிமைப்படுத்தும் வைத்தியசாலைகளுக்கு உதவிகள் மற்றும் இரண்டு சலவை இயந்திரங்கள், Hot Water plants, Wheelchair, Trolleys, PCR Tubes போன்றனவும் வழங்கப்பட்டுள்ன.

 யாழ்ப்பாணம் அரியாலை கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்தின் நூலகம் ஏழு லட்சம் ரூபா செலவில் புனரமைப்புச் செய்து வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் நுழைவாயில் ஏழு லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் மின்னிணைப்பிற்கு மூன்று லட்சம் ரூபா வழங்கப்பட்டது.

 யாழ்ப்பாணம் சென் யோன்ஸ் கல்லூரியின் Tennis Court மற்றும் Basketball Court பன்னிரண்டு லட்சம் ரூபா செலவில் நிர்மாணித்து வழங்கப்பட்டது. Mobile Ambulance Service ஆரம்பிப்பதற்காக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி அனுசரனைக்காக ஐந்து லட்சம் ரூபா வழங்க்கப் பட்டது. மகளிர் மீழ் எழுச்சித் திட்டத்தின் கீழ் 100ற்கும்மேற்பட்ட திருமணமாகாத மகளிருக்கு மாதாந்தம் குறிப்பிட்ட தொகை வைப்பிலிடப்பட்டு அவர்களின் திருமணத்தின் போது மொத்தமாக கையளிக்கப்பட்டது.

 பொருளாதாரச் சுமை காரணமாக பல்வேறு தனியார் மற்றும் நுண்நிதிநிறுவனங்களில் உயர்ந்த வட்டி வீதத்தில் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்காக ஏறக் குறைய ஒருகோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலப்பகுதியில் நல்லூர் உற்சவ காலப்பகுதியில் சிறிய வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட முடியாமலிருந்த 90 குடும்பங்களுக்கு இருபதாயிரம் தொடக்கம் ஐம்பதாயிரம் வரை மொத்தமாக பத்து லட்சம் ரூபா வழங்கப்பட்டது.

 போக்குவரத்து வசதிகளின்றி வெளி மாவட்டத்திற்குச் செல்ல முடியாதிருந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கான பிரயாண ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் பல மாணவர்களுக்கு தங்கியிருந்து படிப்பதற்கான வாடகைப் பணமும் செலுத்தப்பட்டது. சுய தொழில் செய்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டதுடன் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பினை தனது வியாபார நிலையத்தில் ஏற்படுத்திக் கொடுத்தமை.

 முல்லைத்தீவு நாயாற்றுப் பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்ட மீனவர்களின் வாடிகள் மீள நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டன. சுய தொழில் முயற்சிக்காக நூற்றுக்கணக்கான தையல் இயந்திரங்களும் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டுள்ளன.

 மேற்குறிப்பிட்ட பணிகளுடன் இவரது பணிகள் நின்றுவிடவில்லை. நாளும் பொழுதும் அயராது பணியில் ஈடுபட்டு வரும் இவர் பணிகள் பட்டியலிட முடியாதவாறு நீண்டு செல்கின்றது. அன்று தொடங்கிய பணி இன்றும் தொடர்கின்றது. என்றும் தொடரும் என நம்புகின்றோம். உண்மையிலேயே தனது தியாகி அறக்கொடை என்னும் வணிக நிறுவனத்தினூடாக வருகின்ற நிகர இலாபத்தினை மக்களின் நல்வாழ்விற் காகவும் சமூக அறப்பணிகளுக்காகவும் செலவிட்டு வருகின்றார். 

கிட்டத்தட்ட 1500 கோடிகளுக்கு மேல் இதுவரை காலமும் மக்கள் பணிக்காக தனது உழைப்பின் மூலம் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தினை செலவிட்டுள்ள பெருந்தகையின் பணிகளையும் அவர்பற்றிய முழுமையான விபரத்தினையும் ஆவணப் படுத்தும் நோக்கில் அவரது அலுவலகத்திற்குச் சென்றிருந்தோம். அங்கு இயந்திர வேகத்தில் பணிகள் நடைபெற்ற வண்ணமிருந்தன. இப்பணிகளை ஒரு மூலையில் இருந்தவாறு அவதானித்துக் கொண்டிருக்கும் அவரிடம் பல்வேறு கோரிக்கைகளோடு பலர் வருகை தந்த வண்ணமிருந்ததனை அவதானிக்க முடிந்தது. 

அக்கோரிக்கைகளிலிருந்து அவசரமான வற்றினை உடனடியாக நிறைவேற்றுவதற்கும் ஏனையவற்றினை படிப்படியாக நிறைவேற்று வதற்கும் முயன்று வருவதனை காணமுடிந்தது. அவர் கடின உழைப்பின் சிகரமாக இருப்பதனை அவதானிக்க முடிந்தது. இவரது தன்னலம் கருதாத பணிகளையும் பிறருக்கு உதவும் எண்ணம் கொண்ட நல்ல மனிதனை வாழும் போதே வாழத்துவோம்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!