மலையகம் மற்றும் வடகிழக்கு பகுதியூடான ரயில் சேவைகள் பாதிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
மலையகம் மற்றும் வடகிழக்கு பகுதியூடான ரயில் சேவைகள் பாதிப்பு!

தலவாக்கலை மற்றும் வடகொட புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டமையினால் மலையகப் பாதையில் இயங்கும் புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த புகையிரதமே நேற்று (15.06) இரவு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை செல்லும் ரயில்கள் ஹட்டன் ரயில் நிலையம் வரையும், பதுளையில் இருந்து கோட்டை வரை செல்லும் ரயில்கள் நானுஓயா ரயில் நிலையம் வரையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 இரண்டு நிலையங்களுக்கு இடையில் பயணிகளை மாற்றுவதற்கு பஸ்கள் பயன்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை  கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கிச் செல்லும் ரயிலின் கட்டுப்பாட்டாளர் விபத்துக்குள்ளான நிலையில், அப்பகுதியூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த ரயிலானது கம்பஹா நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.