வைத்தியர் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுக்களுக்கு வடக்கு சுகாதார பணிப்பாளர் மௌனம் காப்பது ஏன்?
சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பில் அண்மைக்காலங்களில் பல சர்ச்சைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இடர்க்கு காரணம் அண்மையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அதியட்சகராக நியமிக்கப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டுக்களாக
1. பாடசாலை மாணவர்களுக்கு போதைமாத்திரைகள் வழங்கியது.
2. கட்டட வேலையில் ஊழல்.
3. இராணுவத்தை பயன்படுத்தி பெயின்ட் அடித்துவிட்டு பணம் எடுத்தது
4. பிணத்தை வைத்து பணம் பறிப்பது.
5. காலாவதியான மருந்துகளை நோயாளருக்கு வழங்குவது.
6 . அரச மருந்துகளை தனியார் வைத்தியசாலைக்கு விற்பது.
7. வைத்தியர்கள் சேவைநேரத்தில் தனியார் மருத்துவமனை செல்வது.
8. வைத்தியர்கள் சரியாக சேவையாற்றாதது.
9. வைத்தியர்கள் அதிகநாட்கள் விடுமுறை எடுப்பது.
10. சிறு வைத்தியம் அதாவது மண்டை உடைந்தாலே அம்புலன்சில் வேறு வைத்திய சாலைக்கு அனுப்புவது.
11. நோயாளர்களை தனியார் வைத்திய சாலைக்கு செல்லுமாறு கூறி அங்கு இதே வைத்தியர்கள் பணத்திற்காக சிகிச்சை செய்வது.
இன்னும் பல கேள்விகள் உண்டு இவற்றிற்காக ஏன் இதுவரை எந்த பதிலும் பணிப்பாளர் சொல்லவில்லை? இவற்றிற்குப்பின்னால் பணிப்பாளரின் பண வெறியும் இருக்கிறதா? இதுவரை சட்டத்துறை ஏன் இது விடயங்கள் தொடர்பில் வழக்குப்பதிவு செய்யவில்லை? ஏன் ஒருவரின் நியமனத்தை தடுப்பதற்கு ஒட்டுமொத்த வடக்கு நிர்வாகமும் குறியாக இருந்தது? பணிப்பாளரால் பதில் சொல்ல முடியுமா? என பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் உள்ளன.
ஆகவே இதற்கு முன்னர் இந்த வைத்தியசாலையில் கடமை புரிந்தவர்கள் விளக்கங்கள் தரவேண்டும் எனவும் அத்தோடு வட மாகாண சுகாதார பணிப்பாளர் தகுந்த விளக்கங்களினையும் நியாபூர்வமான விசாரணைகளையும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.