மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் தொடர்பில் புதிய விதிகள்: அமைச்சரவை அனுமதி
பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளி பராமரிப்பு சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக புதிய விதிகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாடசாலை காலங்களில் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை சீர்குலைக்கும் வகையிலும் சில குழுக்கள் மேற்கொள்ளும் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சரவை கவனத்தில் எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சட்டவிரோத செயல்கள் மூலம் பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயாளர்களுக்கு ஏற்படும் அநீதிகளை தடுப்பதற்கு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட யோசனையை தயாரிக்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.