புறக்கணிப்பு நேரத்தில் பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு 1630 சம்பள உயர்வு
ஜூலை 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பணிக்கு சமூகமளித்த நிறைவேற்று அதிகாரமற்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன் பிரகாரம் 3ஆம் தர ஆசிரியர் ஒருவருக்கு 525 ரூபாவும், 2ஆம் தர ஆசிரியருக்கு 1335 ரூபாவும், 1ஆம் தர ஆசிரியருக்கு 1630 ரூபாவும் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்றைய அமைச்சரவை அறிவிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ள அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், ஓய்வூதியத்தைப் பாதிக்காத வகையில் இந்த சம்பள அதிகரிப்புகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் வழங்கப்படும் பாராட்டுச் சான்றிதழ்கள் உரிய நாட்களில் கடமைக்கு சமூகமளித்த அரச ஊழியர்களின் தனிப்பட்ட கோப்புகளில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, இவர்களின் பதவி உயர்வுகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.