கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் கிளப் வசந்தவின் உடல்!
கிளப் வசந்த' என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் பூதவுடல் கொழும்பில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிளப் வசந்தாவின் சடலத்தை வைத்ததால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தொலைபேசி அழைபை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை, அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மீன்பிடி படகுகள் மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முற்படலாம் என புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மன்னார் முழுவதும் விசேட சோதனைச் சாவடிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள், நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க விமான நிலையங்கள் மற்றும் பிற முக்கிய புள்ளிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், மன்னார் ஊடாக தப்பிச் செல்லும் அபாயம் அதிகரித்திருப்பதன் காரணமாக பல விசேட சோதனைச் சாவடிகள் மற்றும் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சட்ட அமலாக்க அதிகாரிகள் மன்னாரில் இருந்து மீன்பிடி படகுகளில் ஏறும் நபர்களை குறிப்பாக செல்லுபடியாகும் மீன்பிடி அடையாள அட்டை இல்லாதவர்கள், அனுமதியற்ற கடல் பயணத்தைத் தடுக்கும் வகையில் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.