அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையின் கடற்பரப்புகளில் ஏற்படவுள்ள மாற்றம்!
அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில் செயற்படும் பல நாள் கடற்றொழில் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு இன்று (16.07) அதிகாலை 3.00 மணியளவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக, அரபிக் கடல் பகுதியில் (10 முதல் 20 வட அட்சரேகைகள் மற்றும் 55 மற்றும் 75 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடையில்) மற்றும் வங்காள விரிகுடாவில் (12 முதல் 17 வட அட்சரேகைகள் மற்றும் 83 மற்றும் 93 கிழக்கு தீர்க்கரேகைகள் வரை) மணிக்கு மிக பலமான காற்று வீசக்கூடும்.
இதேவேளை, தென்மேற்கு பருவமழை செயலில் உள்ளதால், தீவில் தற்போது நிலவும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.