யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே இலங்கை வருகை!
யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே தீவிற்கு விஜயம் செய்துள்ளனர்.
இன்று (16) காலை அவரும் தூதுக்குழுவினரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாட்டை வந்தடைந்தனர்.
அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் Audrey Azoulay இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதோடு எதிர்வரும் 19ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஒட்ரே அசோலே, ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
யுனெஸ்கோ அமைப்பில் இலங்கை உறுப்புரிமை பெற்றதன் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நெலும் பொக்குண திரையரங்கில் நடைபெறவுள்ள கொண்டாட்ட நிகழ்விலும் திருமதி ஒட்ரே அசுலே கலந்துகொள்வதுடன் இலங்கையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. .