அர்ச்சுனா மீது ஐந்து வழக்குகள்: நேரலை வெளியிட தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அலுவலகங்களுக்குள் நுழைய தடை விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக ஐந்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்றைய நீதிமன்ற வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிடவோ நேரலை வெளியிடவோ நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை சமூக ஊடகங்களில் ஏனைய வைத்தியர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களிற்கான ஆதாரங்களுடன் சாவகச்சேரி காவல்துறையில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிட்டார்.
வைத்தியர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு நாளை ஆதாரங்களை சமர்ப்பிக்கா விட்டால், அவர் மீது வழக்கு தொடரலாம் என்றும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது. இன்றைய வழக்கு விசாரணையில் முறைப்பாடளித்த சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர்கள் சார்பில் சட்டத்தரணிகள் திருக்குமரன், குருபரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
எனினும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் தங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவாக சட்டதரணி செலஸ்டின் ஆஜராகியுள்ளார்.