ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் ஈழத் தமிழர்!
ஜூலை மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் ஈழத் தமிழர் என்ற பெருமையை தர்ஷன் செல்வராஜா பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் தீபம் தர்ஷன் செல்வராஜாவிடம் நேற்று (15.07.2024) மாலை 6 மணிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் அதை ஏந்தி 2.5 கிலோமீட்டர்கள் ஓடியுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டது தனது அதிர்ஷ்டம் என தர்ஷன் செல்வராஜா தெரிவித்துள்ளார். மேலும் தன்னைத் தேர்ந்தெடுத்த பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சர் அமேலி ஒளடியா கெஸ்டீரா உட்பட தெரிவுக் குழுவினருக்கு தனது நன்றியை தெரிவிப்பதாகவும் தர்ஷன் கூறியுள்ளார்.
தர்ஷன் செல்வராஜா பிரான்ஸின் வெதுப்பக உரிமையாளர் என்பதும் அவர் பாண் உற்பத்தியாளருக்கான விருதை பாரிஸில் கடந்த வருடம் பெற்றுக்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள 10,000 பேரில் ஒருவராக புலம்பெயர் ஈழத் தமிழருமான தர்ஷன் செல்வராஜாவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இந்த சுடரினை ஏந்திச்சென்றமை தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒலிம்பிக் தாயகமான கிரீசில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் சுடர் பல நாடுகளுக்கு பயணித்து இறுதியாக இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள நாடான பிரான்ஸை வந்தடையவுள்ளது.