ஜனாதிபதித் தேர்தல் எப்போது? வெளியான அறிவிப்பு

#SriLanka #Election
Mayoorikka
4 months ago
ஜனாதிபதித் தேர்தல் எப்போது? வெளியான அறிவிப்பு

எதிர்வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமென நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இன்று(17) காலை சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் இடம்பெற்ற சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சுகாதாரத்துறை அமைச்சர் சினேகபூர்வ அடிப்படையில் எனது காரியாலயத்திற்கு வருகை தந்திருந்தார்.

 இதன் பொழுது வடக்கின் சுகாதார நிலைகள் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடபட்டது. இதன்போது புற்றுநோய் சிகிச்சை நிலையமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை காணப்படும் நிலையில் அதன் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்ட்டது.

 மேலும் 1300 வைத்தியர்கள் மற்றும் 500 தாதியர்கள் நாட்டினை விட்டு வெளியேறியுள்ள நிலையில், மேலும் 15 வைத்தியர்கள் மீள திரும்பியுள்ளதாகவும் பொருளாதார நெருக்கடி குறைகின்ற பொழுது மீள நாட்டிற்கு திரும்புவார்கள் எனவும் சுட்டிகாட்டப்பட்டது.

 இதேவேளை 850 வகையான மருந்து வகைகளில் 40 வகையான மருந்து வகையே தட்டுபாடு காணப்படுகின்றது ஊடகங்களே இதனை பெரிதாக்குவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.

 இதேவேளை இலங்கை தமிழரசு கட்சி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமா என கேட்டார் ? இதன் பொழுது எமது கட்சி பிரதான வேட்பாளர்களுடன் எமது அதிகாரப்பகிர்வு உட்பட உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி எமது மத்திய குழு முடிவெடுக்கும்.

 இதேவேளை எமது மத்தியில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் நிலவுகின்ற கருத்தியலையும் அவருக்கு தெளிவுபடுத்தினேன் . இதற்கு மக்கள் யாழ்ப்பாண மக்கள் தமது வாக்குகளை வழங்குவது அவர்களுடைய உரிமை தொடர்பானது என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!