இலங்கையில் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள்!

#SriLanka #Food #poor man
Mayoorikka
4 months ago
இலங்கையில் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள்!

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை படிப்படியாக மீண்டுவருகின்ற போதிலும், நாடளாவிய ரீதியில் 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதார மற்றும் உணவுத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கு பல்வேறுபட்ட மாற்றுவழிமுறைகளைக் கையாண்டுவரும் நிலை தொடர்வதாக உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

 உலக உணவுத்திட்டத்தின் வழிகாட்டலின்கீழ் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையிலுள்ள முகவரமைப்புக்களும், சிவில் சமூக அமைப்புக்களும் இலங்கை அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து நாடளாவிய ரீதியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைக் கண்டறிவதற்கும், இதுகுறித்து அரசாங்கம், மனிதாபிமான உதவி வழங்கல் அமைப்புக்களுக்கு அவசியமான தகவல்களை வழங்குவதற்குமான மதிப்பாய்வு ஒன்றினைக் கடந்த 11 - 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முன்னெடுத்திருந்தன.

 அதேவேளை தேசிய பாடசாலைகளுக்கான உணவு வழங்கல் செயற்திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் உலக உணவுத்திட்டத்தினால் கடந்த ஜுன் மாதம் நாடளாவிய ரீதியில் 7012 பாடசாலைகளுக்கு 421 மெட்ரிக் தொன் எண்ணெய் மற்றும் 271 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழம் என்பன பகிர்ந்தளிக்கப்பட்டன. அதேபோன்று 'ஆரோக்கியமான உணவு எமது உரிமை' எனும் தொனிப்பொருளில் அனுட்டிக்கப்பட்ட தேசிய போசணை மாதத்தை (ஜுன்) முன்னிட்டு சுகாதார அமைச்சின் போசணைப்பிரிவு அவசியமான தகவல்களைத் திரட்டுவதற்கும், தெளிவூட்டல்களை வழங்குவதற்கும், தொடர்பாடல் வழிமுறைகளை ஊக்குவிப்பதற்கும் உலக உணவுத்திட்டத்தினால் பரந்துபட்ட அளவிலான ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டன.

 மேலும் நாடளாவிய ரீதியில் உணவுப்பாதுகாப்பின்மை நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருப்போருக்குக் கடந்த மாதம் மொத்தமாக 592 மெட்ரிக் தொன் உணவு பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதுடன், ஜுலை - டிசம்பர் வரையான எதிர்வரும் 6 மாதகாலத்துக்கு நலிவுற்ற சமூகப்பிரிவினருக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்குத் தேவையான நிதியின் பெறுமதி 84,425 அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 இந்நிலையில் இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உலக உணவுத்திட்டம், கடந்தகால பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை படிப்படியாக மீண்டுவருகின்ற போதிலும், நாடளாவிய ரீதியில் 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதார மற்றும் உணவுத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு பல்வேறுபட்ட மாற்றுவழிமுறைகளைக் கையாண்டுவருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

 அத்தோடு இலங்கை காலநிலைமாற்ற சவால்களுக்கு முகங்கொடுத்திருப்பதாகவும், அதிகரித்த வெப்பநிலை மற்றும் உயர்வான வெப்பம் என்பன மக்களின் ஆரோக்கியத்திலும், விவசாய நடவடிக்கைகளிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!