பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்க! மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை

#SriLanka #Human Rights
Mayoorikka
4 months ago
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்க! மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாகப் பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும், இந்த சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத் துணை பணிப்பாளர் மீனாட்சி கங்குலி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

 இந்த சட்டத்தின் கீழ் பாதிப்படைந்த சிலர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இலங்கை அரசாங்கம், விமர்சகர்களை மௌனமாக்குவதற்கும், சிறுபான்மை சமூகங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் அடிப்படையற்ற விதத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றது. இதனால், பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!