அர்ச்சுனாவுக்கு ஆதரவாகவும் சத்தியமூர்த்திக்கு எதிராகவும் களமிறங்கும் வைத்தியர் நடராஜா ஜெயக்குமாரன்

#SriLanka #doctor
Mayoorikka
4 months ago
அர்ச்சுனாவுக்கு ஆதரவாகவும் சத்தியமூர்த்திக்கு எதிராகவும் களமிறங்கும் வைத்தியர்   நடராஜா ஜெயக்குமாரன்

யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் நிபுணராகக் கடமையாற்றிய தன்னை, ஊழல்கலை வெளிப்படுத்தியதற்காக, உயிர் அச்சுறுத்தல் கொடுத்த வீட்டை அடித்து நொருக்கி எரித்து யாழில் இருந்து விரட்டி அடித்தனர், யாழ் மருத்துவ அதிகாரிகள் எனக் குற்றம்சாட்டுகின்றார் புற்றுநோய் மருத்துவ நிபுணர் நடராஜா ஜெயக்குமாரன். 

2004 முதல் 2012 யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாளையில் கடமையாற்றிய இவர், அங்கு நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டுவந்தால் தனக்கு எதிராக கடுமையாகவும் மோசமாகவும் நடந்து கொண்டதாக யாழ் போதனா வைத்தியசாலையின் அத்தியேட்சகர் டொக்கடர் சத்தியமூர்த்தி மீது மிகக் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 

 யூலை 19 அன்று இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சியின் நேர்காணலில் ஊடகவியலாளருக்கு பதிலளிக்கும் போதே அவர் இக்ககுற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். 

டொக்கடர் சத்தியமூர்த்தியின் பெயரைச் சொல்வதற்கே அருவருப்படைந்த டொக்டர் நடராஜா ஜெயகுமாரன், அவருடைய பதவியைக் குறிப்பிட்டே இந்த விமர்சனத்தை வைத்தார். நேர்கண்டவர் டொக்டர் சத்தியமுமூர்த்தியின் பெயரைக்குறிப்பிட்டு இக்குற்றச்சாட்டை வைத்த போது அதனை ஆமோதித்தார். தனது குடும்பத்தையும் இவர்கள் வன்முறையால் அச்சுறுத்தியதால், தன்னால் மேற்கொண்டு அங்கு பணிபுரிய முடியவில்லை என்றும் அதனைத் தொடர்ந்து மகரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனை – அபேஸ்கா வில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக புற்றுநோய் சிகிச்சை நிபுணராக அவர் கடமையாற்றி வருகின்றார். 

 யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் டொக்டர் அர்சுனாவால் அம்பலத்துக்கு வந்ததையடுத்து யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தனது சகோதரன் இராசரத்தினம் பிரகாஸ் இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் முதலுதவிச் சிகிச்சை கூட வழங்கபடாமல், யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கும் உடனயாக சிகிச்சை அளிக்கப்படாமல் எட்டு மணி நேரத்துக்குப் பின், இரத்தப்போக்கால் உயிரிழந்த செய்தி யூலை 14 ம் திகதி வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் உள்ள புற்றுநோய் மருத்துவ நிபுணர் டொக்டர் கிருசாந்தி தங்களது தந்தையர்களுடைய புற்றுநோய்யை குணமாக்குவதிலோ நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதிலோ எவ்வித அக்கறையும் காட்டவில்லை என கொடிகாமம், சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு ஆண்மகன்கள் நேரடிச்சாட்சியமளித்தனர். 

இவர்கள் மகரகமையில் டொக்டர் நடராஜா ஜெயக்குமாரனின் சிகிச்சையால் தங்கள் தந்தையர் குணமமைந்ததாகவும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை நம்பியிருந்திருந்தால் தங்கள் தந்தையர்கள் உயிரோடு இருந்திருக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர். 

 புற்றுநோய்க்குள்ளான நோயாளியின் கணவர் தன்னுடைய மனைவிக்கு நடந்த கொடுமையை விபரிக்கையில் “ஆறாவது தடவை மருந்து ஏற்றும் காலம் தவறிவிட்டது” என்று டொக்டர் கிரிசாந்தி தெரிவித்து இருக்கிறார். 

“அப்ப என்ன செய்யலாம் டொக்டர்?” என்று கணவர் கேட்க, “வீட்டை கூட்டிக்கொண்டு போய் நாளைக் எண்ணிக்கொண்டிருங்கோ” என்று அலட்சியமாக அதிகாரத் தோரணையில் தெரிவித்ததாக அக்கணவர் கண்கலங்கியவாறு தெரிவித்தார். அதன் பின் இந்தியா அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று மீண்டும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்குச் சென்ற போது “எங்கேயோ எல்லாம் போய் நீங்கள் ரீட்மன்ட் எடுத்திட்டு வாறத பார்க்கவோ நான் இங்க இருக்கிறன்” என்று டொக்டர் கிருசாந்தி தெரிவித்ததாக அக்கணவர் தெரிவித்தார். மேலும் சிகிச்சைக்கு வந்து உதவும்படி கேட்ட போதும் டொக்டர் கிருசாந்தி மறுத்துள்ளார். 

எல்லாம் கையறுந்த நிலையில் மகரகம புற்றுநோய் மருத்துவ நிலையத்துக்குச் சென்றபோது காலம் கடந்துவிட்டது. அங்கும் புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை கூடுதாலக இருந்ததால் தேவையான சிகிச்சைகள் உடன் கிட்டவில்லை. பாதிக்கப்பட்ட பெண் அங்கு மரணத்தை தழுவினார். 

 டொக்டர் நடராஜா விஜயகுமாரனின் நன்மதிப்பை அறிந்து பலர் யாழில் இருந்து மகரகம சென்று சிகிச்சை எடுக்கின்றனர். முக்கிய சிகிச்சைகள் முடிவடைந்து குணமானவர்கள் ஊர் திரும்பியபின் வழமையான பரிசோதணைகளை யாழ் தெல்லிப்பளையில் செய்யும்படி மகரமக வைத்தியசாலை கடிதம் கொடுத்து விட்டால், யாழ் தெல்லிப்பளையில் இந்த நோயாளிகளை சிகிச்சை அளிக்காமல் அவர்களை அலைச்சலுக்கு உள்ளாக்குவதாக டொக்டர் நடராஜா ஜெயக்குமாரன் தெரிவிக்கின்றார். இது தொடர்பில் டொக்டர் சத்தியமூர்ந்தி உட்பட ஐவர் கையெழுத்திட்டு டொக்டர் நடராஜா ஜெயகுமாரனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் அவர் தேவையற்ற விதத்தில் தன்னுடைய நோயாளிகளை தங்களுக்கு அனுப்பி வைப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

 ஒவ்வொரு நோயாளிக்கும் தனக்கு பொருத்தமான வசதியான இடத்தில் சிகிச்சையைப் பெறுவதற்கு முழு உரிமையும் உண்டு. அரசாங்கம் இவர்களுக்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கே சம்பளம் வழங்குகிறது. 

ஆனால் டொக்டர் சத்தியமூர்த்தி தனிப்பட்ட முறையில் டொக்டர் நடராஜா ஜெயகுமாரனைப் பழிவாங்கவே இவ்விதமாக நடந்தகொள்வதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இவர்கள் மருத்துவத்துறையை அபிவிருத்தி செய்வதற்குப் பதிலாக அங்குள்ள கண்ணியமான கறைபடியாத மருத்துவர்களை அதிகாரிகளை விரட்டுவதிலும் யாழ் நோக்கி வரும் சிறந்த மருத்துவர்களை அதிகாரிகளை விரட்டுவதிலுமே குறியாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் வலுவடைந்து வருகின்றது.

 சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் என்ன நடந்ததோ அதுவே தனக்கு 2012 இல் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நிகழ்ந்தது என்கிறார் டொக்டர் நடராஜா ஜெயக்குமாரன்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!