குறிப்பிட்ட சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை!
அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தக சமூகம் செயற்படாவிட்டால் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும் என, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நுகர்வோர் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான யோசனைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களில் பாராளுமன்றத்தில் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று (19) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர்இதனைக் குறிப்பிட்டார்.
தற்போது 15 அத்தியாவசியப் பொருட்களுக்கு வாரம் ஒருமுறை விலையை அறிவித்து வருகிறோம். ஆனால், அரசு வழங்கும் சலுகைகள் நுகர்வோருக்கு கிடைக்காமல் இருப்பதை அவதானிக்கிறோம்.
இதுகுறித்து வணிகர் சங்கங்களுடன் அடுத்த சில நாட்களில் விவாதிக்க உள்ளோம். நுகர்வோருக்கு நாங்கள் வழங்கும் சலுகைகள் வழங்கப்படவில்லை, சில பொருட்களுக்கு ஒரு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கூற வேண்டும்.