தமிழீழ இராணுவ இயக்கத்தின் தலைவர் மகேஸ்வரன் காலமானார்!
தமிழீழ ராணுவம் இயக்கத்தின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் காலமாகியுள்ளதாக தோழன் பாலன் என்பவர் தனது முகநூலில் தகவல் வெளியிட்டுள்ளார்.
தமிழீழ இராணுவம் என்பது இலங்கையில் செயலிழந்த தமிழ் பிரிவினைவாதக் குழு என்பதுடன் இது பனாகொட த.மகேஸ்வரனால் நிறுவப்பட்ட்டமை குறிப்பிடத்தக்கது.
லண்டனில் படிப்பை பாதியில் விட்டிட்டு தாய்நாட்டிற்காக போராட வந்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் இலங்கையிலும் இந்தியாவிலும் நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டவர் என்பதுடன் பனாகொடை இராணுவ முகாமில் இருந்து தப்பியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் பின்னர் மட்டக்களப்பு சிறையுடைப்பை நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் "தம்பா"எனும் இயக்கம் கட்டியமைத்து அதற்கு தலைமையேற்று ஈழ விடுதலைப் போரில் தனது அர்ப்பணிப்புடனான பங்களிப்பை வழங்கிய தோழர் மகேஸ்வரன் அவர்கள் ஈழப்போராட்ட வரலாற்றில் மறுக்கமுடியாத பதிவை பதித்துச் சென்றுள்ள தோழர் மகேஸ்வரன் அக்காலத்திலும் , பிற்காலத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் தோழமையுடன் வாழ்ந்தவர்.
உலக வரலாற்றையும் , மனித வரலாற்றையும் தனக்கேயுரிய நகைச்சுவை கலந்து பகிரந்து கொள்ளும் நடமாடும் விக்கிப்பீடியா மனிதராக வாழ்ந்த தோழர் மகேஸ்வரன் அவர்களை ஈழ வரலாறு என்றும் நினைவில் பதிந்திருக்கும்.