செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்க இலங்கை வரும் எலன் மஸ்க்!
இலங்கையில் தனது ஸ்ரார்லிங்க் ( Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவதற்காக உலகின் முன்னணி பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ், ரெஸ்லா கார் தலைமை செயல் அதிகாரியும், ஸ்ரார்லிங் சேவையின் உரிமையாளருமான எலோன் மஸ்க் அடுத்த மாதம் இலங்கை வர வாய்ப்புள்ளதாக அதிகாரி ஒருவர் நேற்று (21) தெரிவித்துள்ளார்.
முன்னதாக, Starlink அங்கு இணைய சேவைகளை வழங்குவதற்கு அரசாங்கம் பூர்வாங்க அனுமதியை வழங்கியது. அதன்பிறகு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம் அரசாங்கம் செயல்முறையை துரிதப்படுத்தியது.
எலோன் மஸ்க் வருகைக்கான காலக்கெடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஆகஸ்ட் மாதம் இந்த விஜயம் நடைபெறும் என்றார்.
ஸ்ரார்லிங் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த சேவையை செயல்படுத்த மூன்று வாரங்கள் ஆகும் என்று உபகரணங்கள் மற்றும் அனைத்தையும் நிறுவுவதன் மூலம் செயல்பாட்டிற்கான உள்கட்டமைப்பை அமைப்பதற்கு அவர்களுக்கு நீண்ட காலம் தேவை,' என்று அவர் கூறினார்.
ஸ்ரார்லிங்கிற்கு புதிய சட்டத்தின் கீழ் சேவை வழங்குநர் உரிமம் வழங்கப்படும் என்றார்.