வெளிநாடுகளில் இருக்கும் 164 இலங்கையர்களுக்கு இன்டர்போலினால் சிவப்பு பிடிவிராந்து!

#SriLanka #Arrest #Police #Crime
Mayoorikka
4 months ago
வெளிநாடுகளில் இருக்கும் 164 இலங்கையர்களுக்கு இன்டர்போலினால் சிவப்பு பிடிவிராந்து!

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 164 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிராந்து உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

 சர்வதேச பொலிஸாரிடம் இவ்வாறு சிவப்பு பிடிவிராந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

 பாதாள உலகக் குழு செயற்பாடுகள், போதைப் பொருள் வர்த்தகம், போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக இவ்வாறு சிவப்பு பிடிவிராந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

 குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கில் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. இந்தக் குற்றவாளிகளில் அநேகமானவர்கள் டுபாயில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 மேலும் இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட வேறும் நாடுகளிலும் மேலும் சில குற்றவாளிகள் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளப் வசந்த படுகொலையுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கஞ்சிபானை இம்ரான் பிரான்சில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. 

இவருடன் குடு அஞ்சு என்ற மற்றுமொரு பாதாள உலகக் குழு தலைவரும் பிரான்ஸில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் இந்த சந்தேக நபர்களை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!