கொரோனா மரண உடற் தகனம்: முஸ்லீம் மக்களிடம் மன்னிப்புக் கோரிய அரசாங்கம்

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
1 month ago
கொரோனா மரண உடற் தகனம்: முஸ்லீம் மக்களிடம் மன்னிப்புக் கோரிய அரசாங்கம்

கொரோனா காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டாய உடற் தகனக் கொள்கையினால் பாதிக்கப்பட்ட சமூகத்திடம் அரசாங்கம் மன்னிப்பு கோருவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 நிலத்தடி நீருக்குப் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்து, கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் உடல்கள் கட்டாயத் தகனம் செய்யப்பட்டன.

 இதற்கமைய, 276 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், நடத்தப்பட்ட ஆய்வில் அவ்வாறு கொரோனா தொற்று உறுதியான நிலையில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது எனக் கண்டறியப்பட்டது.

 இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சமூகத்திடம் அரசாங்கம் மன்னிப்பு கோருவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஆகியோர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.