சிவில் நடைமுறைச் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது!
சிவில் நடைமுறைச் சட்டம் (திருத்தம்) சட்டமூலம் நேற்று (23.07) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று (23) காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்பெற்றதுடன், அதன் பின்னர் குழுக் கூட்டத்தின் போது சட்டமூலத்திற்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டது.
மேற்படி சட்டமூலம் 13 மே 2024 அன்று நீதித்துறை, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் சிவில் நடைமுறைச் சட்டத்தின் (101ஆவது அதிகாரசபையாக இருந்த) பிரிவுகளைத் திருத்துவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதேவேளை, நீதித்துறை அமைப்புச் சட்டத்தின் கீழ், 2360/22 மற்றும் 2371/13 என்ற அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உத்தரவுகளுக்கு இன்று பாராளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.