யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல்!
#SriLanka
#Jaffna
Mayoorikka
1 year ago
கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் செவ்வாய்க்கிழமை மாலை (23) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது படுகொலை செய்ஞப்பட்டவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். முற்றவெளி மைதானம் முன்பாக செவ்வாய்க்கிழமை (23) மாலை இவ் நினைவேந்தல் நடைபெற்றது.

இதன்போது நினைவேந்தல் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ஏனையவர்களும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இந் நிகழ்வில் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், மகளீர் அணித் தலைவி வாசுகி சுதாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.