பொலிஸ் மா அதிபர் தொடர்பான தீர்ப்பை யார் நடைமுறைப்படுத்துவது என்பதே பிரச்சினை!

#SriLanka #Police
Mayoorikka
2 months ago
பொலிஸ் மா அதிபர் தொடர்பான தீர்ப்பை யார் நடைமுறைப்படுத்துவது என்பதே பிரச்சினை!

பொலிஸ் மா அதிபர் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை யார் நடைமுறைப்படுத்துவது என்பதே தற்போதுள்ள பிரச்சினை. ஆகவே, அந்த தீர்ப்பு அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபராக பணியாற்றுவதை தடை செய்து உயர் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டுள்ள தடையுத்தரவு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஆரம்பத்தின் போதே அரசியலமைப்பு பேரவை ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் தான் அரசியலமைப்பு பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரத்தின் மாற்றம் 21 ஆவது திருத்தத்தில் 7(அ) வில் காணப்படுகிறது. அதன்படி அரசியலமைப்பு பேரவை நிறைவேற்றுத் துறையின் ஒரு பகுதியே.

 அதனால், அது தொடர்பில் அமைச்சரவையில் பேச முடியாது. அது தொடர்பில் கலந்துரையாடினாலும் அமைச்சரவையால் தீர்மானம் எடுக்க முடியாது. சில நியமனங்களை அரசியலமைப்பு பேரவை அனுமதிக்க வேண்டும். 

பொலிஸ் மா அதிபர் நியமனத்திலும் அது பொருந்தும். ஜனாதிபதியால் எவருடைய பெயராவது முன் வைக்கப்பட்டால் அதனை உறுதிப்படுத்துவது அல்லது உறுதிப்படுத்தாமல் விடுவது அரசியலமைப்பு பேரவையின் கடமையும் பொறுப்புமாகும்.

 அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களை தடை செய்வதானால் அது உயர் நீதிமன்றத்திற்கு உரிய விடயம். அது தொடர்பில் நாம் விவாதத்திற்கு வரவில்லை.உயர் நீதிமன்றத் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்ட பின்னர் அதனை செயல்படுத்துவது யார் என்பதே தற்போதுள்ள பிரச்சினை.

 அந்த வகையில் அரசியலமைப்பு பேரவையின் தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன செயற்படுவதால் அவர் வெளிநாட்டு விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் இந்த பிரச்சினையை அவரிடம் சமர்ப்பித்து அதற்கு தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!