பதில் பொலிஸ்மா அதிபரை ஏன் நியமிக்கவில்லை? சபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி

#SriLanka #Police
Mayoorikka
2 months ago
பதில் பொலிஸ்மா அதிபரை ஏன் நியமிக்கவில்லை?  சபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி

தேசபந்து தென்னக்கோன், பொலிஸ்மா அதிபராக செயற்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அந்தப் பதவிக்கு பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க நடவடிக்கை எடுக்காதிருப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியதால் சபையில் வியாழக்கிழமை (25) சர்ச்சை ஏற்பட்டது. 

 இதன்போது சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஆளும்கட்சி பிரதம கொரடா பிரசன்ன ரணதுங்க ஆகியோர் எதிர்க்கட்சியினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பாராளுமன்றம் வியாழக்கிழமை (25) முற்பகல் 9.30 மணியளவில் பிரதி சபாநாயகர் ஆஜித் ராஜபக்‌ஷ தலைமையில் கூடியதை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் தனது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினார்.

 இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகையில், ஜனநாயக முறை இலங்கையில் உள்ளது. சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை என்ற மூன்று அதிகார தூண்களுக்கு இடையே அதிகார பகிர்வுகள் நடக்கின்றன. 

இந்த கட்டமைப்புக்குள் சட்டவாக்கத்தை பாதுகாக்க வேண்டும். அரசியலமைப்புக்கு உரிய கௌரவமளித்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக உயர்நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கினால் அந்த தீர்ப்பை கேள்விக்கு உட்படுத்த முடியாது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் தொடர்பான தீர்மானம் தொடர்பில் அமைச்சரவை ஆராய்ந்துள்ளது. இவ்வாறாக ஜனநாயகம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம். 

சட்டத்தை பின்பற்ற வேண்டும். உயர்நீதிமன்றம் தீர்மானித்தால் ஜனாதிபதி, அமைச்சரவைக்கு தேவையானவாறு தீர்மானம் எடுக்க முடியாது. அமைச்சரவையினால் நீதிமன்றத்தை அவமதிக்க முடியாது என்றார்.

 இதன்போது பதிலளித்த சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுகையில், அரசியலமைப்பு பேரவை அமைக்கப்பட்டுள்ளது. 20 பேர் அதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரமே பரிணாமமடைந்து இவ்வாறு பேரவையாக வந்துள்ளது. இதன்படி நிறைவேற்றுத்துறையில் ஒரு பகுதியே அது. 

இந்த பேரவையால் நீதிபதிகள், பொலிஸ்மா அதிபர், மத்திய வங்கி ஆளுனர் உள்ளிட்டோரை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. இதன்படி இந்த விடயம் அரசியலமைப்பு பேரவைக்கு மீண்டும் வர வேண்டும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!