வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை!
வவுனியா வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
25ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு கிராம சேவையாளர் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் மதிமுகராசா பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்திற்கு சென்று இருந்தார்.
அங்கு கடும் விசாரணைகள் இடம் பெற்றதோடு வெடுக்குநாறி ஆலயம் தொடர்பான பல்வேறு விடயங்களும் அவரிடம் வினாவப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாட்டின் போது பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் பொலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களில் ஆலய பூசகரும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.