இலங்கையில் சுமார் 50 வெளிநாட்டவர்கள் அதிரடியாக கைது!

#SriLanka #Arrest
Mayoorikka
2 months ago
இலங்கையில் சுமார் 50 வெளிநாட்டவர்கள் அதிரடியாக கைது!

ஒன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் புத்தளம் பகுதியில் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இந்த நடவடிக்கையில் 44 ஆண்களும் 09 பெண்களும் கைது செய்யப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புத்தளம் கல்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் இருந்து நீதிமன்ற உத்தரவைப் பெற்று விசாரணை அதிகாரிகளால் குறித்த ஹோட்டலில் சோதனை மேற்கொள்ளப்பட்ட போதே இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 இந்த நடவடிக்கையின் போது, ​​98 கையடக்கத் தொலைபேசிகள், 44 கணனிகள் மற்றும் பெருந்தொகையான சிம் அட்டைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலும் இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதன்போது 10 லட்சம் ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!