தமிழ் பொதுவேட்பாளர் விடையம்: சிங்கள வேட்பாளர்களிடையே அச்ச நிலை! விக்னேஸ்வரன்

#SriLanka #Election #C V Vigneswaran
Mayoorikka
3 months ago
தமிழ் பொதுவேட்பாளர் விடையம்: சிங்கள வேட்பாளர்களிடையே அச்ச நிலை! விக்னேஸ்வரன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் களமிறக்கப்படவுள்ள தமிழ் பொதுவேட்பாளரை இவ் வாரத்திற்குள் தெரிவு செய்வோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

 யாழில் நேற்றையதினம்(31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தபடுவது ரணிலுக்கோ, சஜித்துக்கோ அல்லது வேறு எவருக்குமோ ஆதரவை வழங்வதற்காக அல்ல. 

 இதில் ரணிலுக்கா என்று கூறுவது முற்றிலும் தவறானது. உண்மையில் எமது தமிழ் மக்களுக்காக அவர்களின் எதிர்காலத்திற்காகவே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. இதில் பொது வேட்பாளர் தேர்வில் பலருடைய பெயர்கள் இருக்கின்றன. அதில் ஒருவரை தேர்வு செய்வதென்றால் மாறி மாறி குற்றசாட்டுகள் எழுகின்ற நிலைமை உள்ளது.

 அதிலும் ஏதாவது ஒரு விதத்தில் தான் நினைக்கிற ஒருவர் தான் பொது வேட்பாளராக வர வேண்டுமென யோசிக்கிறவர்களும் இருக்கின்றனர். அவர்கள் மிடுக்கோடு பேசுகிறவர்களாக இருக்கிற நிலைமையில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் சற்று தாமதமாகிறது. மேலும், இவர்கள் ஒருவரை சுட்டிகாட்டி அவரை இணைத்தால் அவர் தான் வரமாட்டேன் என கூறுகிற நிலைமையும் உள்ளது. உண்மையில் ஒருவரை தெரிவு செய்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. 

ஆனாலும் அனேகமாக இந்த வாரத்திற்குள் பொது வேட்பாளர் ஒருவரை தேர்ந்தெடுத்து விடுவோம். இந்த பொது வேட்பாளர் விவகாரத்தை கைவிடச் சொல்லி தூதரகங்களின் அழுத்தம் ஏதும் இல்லை. இந்திய தரப்பின் அழுத்தங்கள் இருப்பதாக எனக்கு தெரியாது. என்னுடன் இப்படிபட்ட விசயங்களை அவர்கள் கதைப்பது குறைவு. ஏதாவது கலாச்சாரம், சமயம் ரீதியாக தான் கதைப்பார்கள். இப்படிபட்ட விடயங்களை கதைப்பது குறைவு. 

அதனால் இதைப்பற்றி எனக்கு தெரியாது. ஆனால் சுமந்திரன் தான் இப்ப பெரிய சத்தம் எல்லாம் போட்டு கொண்டிருக்கிறார். அதாவது தாங்கள் எப்படியாவது பொதுவேட்பாளர் நியமிப்பதை நிறுத்துவோம் என்றும் தங்களை துரோகி என்று சொன்னாலும் பயப்படபோவதில்லை என்றெல்லாம் சொல்லி கொண்டு இருக்கிறார். 

 இதனைவிட தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டாமென வேறுஅழுத்தங்கள் வரவில்லை. ஆனால் சிங்கள வேட்பாளர்களிடையே ஒருவிதமான அச்சமும் பயமும் அருவருப்பும் வந்திருப்பதாக தெரிகிறது எனவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!