கட்டுப்பணம் செலுத்தினார் விஜயதாஸ ராஜபக்ஷ !

#SriLanka #Election
Mayoorikka
2 months ago
கட்டுப்பணம் செலுத்தினார் விஜயதாஸ ராஜபக்ஷ !

தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில், தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாஸ ராஜபக்ஸ இன்று வியாழக்கிழமை (01) கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

 ராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுதற்கு இன்றைய தினம் வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 7 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

 இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சார்பில் போட்டியிட 05 வேட்பாளர்களும், சுயாதீனமாக போட்டியிட 02 வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்கு கடந்த மாதம் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை வெளியிட்டது. 

அறிவிப்பு வெளியான ஒருசில மணித்தியாலத்துக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்தி ரத்ன சுயாதீன வேட்பாளராகவும், புதிய சுதந்திர முன்னணியின் வேட்பாளராக ஓசல லக்மால் அனில் ஹேரத் என்பவரும், இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு எஸ்.ஜி.லியனகே என்பவரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

 ஐக்கிய மக்கள் சார்பில் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும்,தேசிய அபிவிருத்தி முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு எஸ்.கே பண்டாரநாயக்கவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!