ஜனாதிபதி தேர்தலில் ஆசிரியர் ஒருவர் போட்டி?
#SriLanka
#Election
Mayoorikka
2 months ago
நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.
இந்த தேர்தலில் ஆசிரியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பயின்ற இவர், நாட்டில் பல பாடசாலைகளில் கற்பித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட உள்ளார் என்றும். கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளார் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலில் போட்டியிடுவதாயின், பாடசாலையில் விடுமுறை பெற வேண்டும். அதற்காக விண்ணப்பித்து, அனுமதியையும் பெற்றுக்கொண்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.