எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

#SriLanka #Fuel
Mayoorikka
10 months ago
எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாடளாவிய ரீதியில் தடையின்றி எரிபொருள் விநியோகத்தை தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அமைச்சர், அனைத்துப் பொருட்களின் கையிருப்பையும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பராமரிப்பதால், தடைகளற்ற எரிபொருள் விநியோகம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

 மேலும், வருடாந்த பராமரிப்பு மற்றும் சேவைக்கு உட்பட்ட சுத்திகரிப்பு நிலையம் ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் அதன் செயல்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள் சரக்கு திட்டம், இருப்பு சேமிப்பு திறன், விநியோகத் திட்டம் மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நிர்வாகத்துடன் நேற்றைய தினம் ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் புதுப்பிப்பை வழங்கினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!