இந்திய மீனவர்களின் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும் - இலங்கைக்கு வலியுறுத்து!
இந்திய மீன்பிடி படகு இலங்கை கடற்பரப்பில் கரை ஒதுங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இந்தியாவுக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சுக்கு அழைப்பு விடுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு, இந்த மீனவர் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் எப்பொழுதும் கையாள வேண்டியதன் அவசியத்தை இந்திய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக கூறுகிறது.
இந்திய மீனவர்களின் பாதுகாப்பிற்கு இந்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இவ்விவகாரத்தை இரு நாடுகளும் புரிந்துகொண்டு இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.