ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிரடி நடவடிக்கை : பதவிகளை இழந்த ஊழியர்கள்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா, அநுராதபுரம், மாத்தறை மற்றும் காலி மாவட்டத் தலைவர்கள் ஆகிய மூன்று அமைச்சர்கள் மற்றும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்ததன் காரணமாக அந்தப் பதவிகளின் பணிகளைப் பார்ப்பதற்காக நான்கு பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் மாவட்ட தலைவராக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேனவின் மாவட்டத் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கம்பஹா மாவட்டத் தலைவராக இருந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்குப் பதிலாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த நியமிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்குப் பதிலாக மாத்தறை மாவட்டத் தலைமைப் பணிகளைப் பார்க்க பாராளுமன்ற உறுப்பினர் நிபுன ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், காலி மாவட்ட தலைவராக கடமையாற்றிய திரு.ரமேஷ் பத்திரனவுக்கு பதிலாக அந்த மாவட்டத்தில் பணியாற்றுவதற்கு இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.