இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : பலர் படுகாயம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஹாஓயா - அரலகங்வில வீதியின் MDK ஏரிக்கு செல்லும் சந்திக்கு அருகில் நேற்று (03.08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மஹா ஓயாவில் இருந்து அரலகங்வில நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று எதிர்திசையில் வந்த மற்றுமொரு தனியார் பஸ்ஸுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பேரூந்துகளிலும் பயணித்த 02 ஆண்கள், 12 பெண்கள், 06 சிறுவர்கள் மற்றும் 02 சிறுமிகள் காயமடைந்து மஹா ஓயா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மஹாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.