சென்னையில் பிரமாண்டமாக இடம்பெற்ற கவிதை நூல் அறிமுக விழா : இலங்கை கவிஞருக்கும் வாய்ப்பு!
கலைஞரின் 6 வது நினைவு தினத்தில் “கலைஞர் 100 கவிஞர்கள் 100 “நிகழ்வில் சிறப்புக் கவிஞராக கல்லாறு சதீஷ் அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது தமிழ் நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வா.வேலு நூலை அறிமுகம் செய்து பிரதி வழங்கி பொன்னாடை போற்றிக் கெளரவித்தார்.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உட்பட பல ஆளுமைகள் கலந்து கொண்டார்கள்.
இந்த நூலில் உள்ள நூறு கவிதைகளில்“தமிழ் நாட்டின் கல்விப் பிதா” எனும் தலைப்பில் சதிஷின் கவிதையும் இடம்பெற்றுள்ளது.
இந்நூலில் எழுதிய கவிஞர்கள் வரிசையில் பாரதிதாசன்,மு.வரதராசன்,நீதியரசர் ச.மோகன், அவ்வை நடராசன், சுரதா, அ.மருதகாசி, அப்துல் ரகுமான், வாலி, ஈரோடுதமிழன்பன், முத்துலிங்கம், மு.மேத்தா, நா.காமராசன், எஸ்.ஜெகத்ரட்சகன், கனிமொழி கருணாநிதி, காசி ஆனந்தன், தமிழச்சி தங்கபாண்டியன், பிறைசூடன்,பழனி பாரதி,நா.முத்துக்குமார், கபிலன்,பா.விஜய்,விவேகா,கபிலன் வைரமுத்து,நெல்லை ஜெயந்தா, மனுஷ்ய புத்திரன், சல்மா,ஆண்டாள் பிரியதர்சினி,ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன், சீனுராமசாமி, என்.லிங்குசாமி, பொத்துவில் அஸ்மின், எனத் தொடரும் நூறு கவிஞர்களில் கவிப்பேரரசு வைரமுத்து முதல் கல்லாறு சதீஷ் வரை கவிதைகளைப் படைத்துள்ளார்கள்.