தமிழ் பொது வேட்பாளர் எதற்காக நிறுத்தப்படுகிறார்? சுரேஷ் பதில்
இந்தியா யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பல நாடுகளும் ஐ.நா செயலாளரும் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கபடவேண்டும் என கூறிய நிலையில் அரசாங்கம் வேறு தளத்தில் பயணிக்கிறது.
இதனை தடுத்து நிறுத்தவே தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுகிறார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமசந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் பொது வேட்பாளரை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் வியாழக்கிழமை (08)நடைபெற்றது.
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், யுத்தம் முடிந்து 15 வருட காலம் முடிவடைந்த நிலையில் எந்தவொரு அரசாங்கமும் தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்க இல்லை.
ஆர்வத்துடன் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முன்வரவும் இல்லை. யுத்தத்துக்கு பிறகு பல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எமது மக்கள், நாங்கள் வாக்களித்திருக்கின்றோம்... அதில் சிலர் வென்றிருக்கின்றார்கள்.
ஒரு சிலர் தோற்றிருக்கின்றார்கள். வென்றவர்களே தோற்றவர்களே தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்கு எந்த அடிப்படைச் சிந்தனைகளும் அவர்களிடம் இருந்தது இல்லை. யுத்தத்திற்கு பிறகு மிகப் பெரிய அளவில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வடக்கு, கிழக்கில் நிறுவுகின்ற வேலைத்திட்டத்தை இன்றும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இவை தொடர்பில் ஜனாதிபதியுடன் அரசாங்கத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடியிருந்தாலும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தமிழ் மக்கள் அவர்களை நம்பி வாக்களித்தாலும் அரசாங்கம் இதற்கான முடிவைக் காணவில்லை என்பதை நாங்கள் எல்லோரும் சிந்திக்கவேண்டும்.
யுத்தத்திற்கு பிறகு அரசியல் கட்சியாக பல குழுக்களாக அமைப்புக்களாக பிரிந்து நின்றது அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இவை மாற்றப்பட வேண்டும். இந்த மண்ணில் தமிழ் மக்கள் சமத்துவமாக கலை கலாசாரங்களுடன் சுதந்திரமாக எம்மை நாங்கள் ஆளுகின்ற உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் தகுதி வாய்ந்தவர்கள் இவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையில் இடம்பெற்ற அரச வங்குரோத்து என்பது பொருளாதாரப் பிரச்சினை மாத்திரம்தான் வேறு எதுவும் இல்லை என்ற விம்பத்தை சர்வதேச ரீதியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு அதுவல்ல. தேசிய இனப்பிரச்சினை ஒன்று இருக்கின்றது அது தீர்க்கப்படவேண்டும். இந்தப் பிரச்சினையை வெளியுலகத்திற்கு கொண்டு செல்ல சிங்கள தரப்பிற்கு அதைத் தெளிவு படுத்துவதற்கு நாங்கள் எடுத்துக்கொண்ட ஜனநாயக பூர்வமான வழி என்னவென்றால் வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய மக்கள் ஆதரவாக வாக்களிக்கின்றபோது இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதை வெளியுலகமும் இராஜதந்திர சமூகமும் எல்லோருக்கும் மீண்டும் ஒரு முறை உணரவைக்கப்படவேண்டும். இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாது இருக்கின்றது.
இதில் இருந்து நழுவிப் போகமுடியாது சிவில் சமூகம் அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆதரவாக செயற்படவேண்டும் என்பதால் தான் பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளோம். வடக்கு கிழக்கில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் இதனை ஆர்வத்துடன் வரவேற்றிருக்கின்றார்கள்.
அரசாங்க ஆதரவுடன் இருக்கும் ஒரு சிலர் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். ஏவ்வாறு இருப்பினும் வடகிழக்கில் இருக்ககூடிய தமிழ் மக்கள் பல லட்சமாக வாக்களிக்கின்றபோது நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பல பிரச்சினைகளை வெளிக்காட்டுகின்கின்ற அதேவேளை தமிழ்த்தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கப்படவேண்டும் என்பதைதெளிவாக சுட்டிக்காட்டுவதற்கு இதனைப் பயன்படுத்தவேண்டும். நாங்கள் பொது வேட்பாளரை நிறுத்தப்போகின்றோம் என்பதற்கு பிறக்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் இங்கு வருகின்றார்கள்.
இவர்களுக்கு எமது மக்களின் வாக்குப் பலம் புரிகின்றது. ஆதனால் தான் வாக்குகளை பெற்றுக் கொள்பவதற்காக தேடி வருகின்றார்கள். நாங்கள் 35 வருடங்களுக்கு மேலாக போராடி பல லட்சம் பேரை இழந்தும் இன்றும் எங்களை புதைத்து சிதைப்பதற்குகத்தான் திட்டமிட்டுள்ளார்கள் இவற்றை எதிர்த்து எமது மண்ணில் நாங்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு எமது பிரச்சினைகள் தீர்க்ககப்படபொதுவேட்பீளரை நிறுத்துகின்றோம் இந்தியாஉட்பட பல நாடுகளும் ஐ.நா பொதுச்சபை செயலாளர் கூட இல்ல்கை வந்திருந்தபோது கூட எமது பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் எனபேசி இருந்தார்கள் இன்று அதிலிருந்து வெளியேறி இலங்கை அரசாங்கம் வேறெரு தடத்தில் பயணம் செய்ய முயற்சிக்கின்றது.
இதனை தடுத்து நிறுத்தி தமிழ்த்தேசியப் பிரச்சினை தீரரக்கப்படவேண்டும் இதற்கு தமிழ மக்கள் அணிதிரண்டு பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங் கவேண்டும் தமிழ் மக்கள் மட்டும் பாதிக்கப்பட வில்லை தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் மலையக மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் அவர்களும் இதனைப் புரிந்து கொள்வார்கள் என நம்கின்றோம்.
எனவே தமிழ் பொதுவேட்பாளரை நாங்கள் ஐனாதிபதி வேட்பாளராக இறக்கியுள்ளோம் அவருக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.இதேவேளை தமிழ் பொது வேட்பாளர் சுயேட்சையாகவே போட்டியிடுகின்றார் வெகுவிரைவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டு பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றார்.