தமிழ் சிங்கள மக்களின் ஒற்றுமைக்கு தடையாக இருப்பது இஸ்லாமியர்களா?
இலங்கையிலே இனப்பிரச்சினை மதப்பிரச்சினை பட்டினி பிரச்சனை தொழில் பிரச்சனை பொருளாதார பிரச்சனை, சாதிப் பிரச்சனை என்று பல பிரச்சினைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இருந்தாலும் சில அண்டை நாடுகளை ஒப்பிடும் பார்க்கும்போது சற்று பெருமூச்சு விட கூடியதாக உள்ளது.
அந்த வகையிலே இலங்கையில் எங்களிடத்தில் ஒற்றுமை இருக்கிறதா ஒற்றுமையாக மூவினங்களும் உள்ளனரா? சிங்களம் பௌத்த மதம், தமிழர்கள் இந்து மதம், முஸ்லிம்கள் இஸ்லாமிய மதம் மற்றும் கிறிஸ்தவ மதம் என்று இப்படியான மதங்கள் பரவலாக இரண்டு மொழி பேசுகின்றவர்களிடையே இருந்து கொண்டிருக்கிறது.
இதற்குள்ளே நாங்கள் 35 வருடங்களாக போர் சூழலில் வாழ்ந்தவர்கள். 2009 ஆம் ஆண்டு போர் மரணிக்கப்பட்டது. அதன்பிற்பாடு தற்பொழுது இலங்கை ஒரு சுமுகமான நிலையிலே காணப்படுகிறது சற்று பெருமூச்சு விடக் கூடியதாக இருக்கிறது.
இருந்தாலும் அதை தாண்டி இந்த இனங்களுக்கு இடையே ஒற்றுமை என்று பார்க்கின்ற பொழுது தமிழர்களுக்கிடையேயும் இஸ்லாமியர்கள் இடையேயும் மறைமுகமாக ஒரு இருள் இருந்தாலும் ஓரளவிற்கு ஒற்றுமை இருந்து கொண்டு தான் இருக்கிறது.
சிங்களவர்கள் தமிழர்கள் என்று பார்க்கின்ற பொழுது சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமை ஆவதற்கு ஒரு சில தடைகள் இருக்கின்றன அதில் பெரிய தடை என்று பார்க்கப் போனால் சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ் இயங்கினால் அது நிச்சயமாக இஸ்லாமியர்களுக்கு ஒரு பாதகத்தை ஏற்படுத்தும் என்ற ஒரு மனப்போக்கு இஸ்லாமியர்களிடையே உள்ளது.
அந்த வகையிலே தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக இருந்தால் அதற்கு நிச்சயமாக இஸ்லாமிய மக்கள் விரும்ப மாட்டார்கள் இது இஸ்லாமியர்களுடைய இடத்தில் நாங்கள் தமிழர்கள் இருந்தாலும் நிச்சயமாக அதைத்தான் செய்வோம் என்பது எதார்த்தமான உண்மை.
அது சில வேளைகளிலே அவர்கள் கடந்து வந்த பாதையிலே அவர்கள் தமிழர்கள் ஊடாகப்பட்ட சில துன்பியல் சம்பவங்கள் காரணம் கருதியோ காரணம் கருதாமலோ நடைபெற்று இருந்தாலும் அந்த வடு, அந்த பயம் இப்பொழுதும் அவருடைய மனதிலே இருப்பதை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
மக்களுடைய மனதிலே அது இருக்காவிட்டால், இல்லாமல் அழிக்கப்பட்டாலும் சற்று மறைக்கப்பட்டாலும் அதை அவர்கள் மறந்து கொண்டு செல்கின்ற துணிவு இருந்தாலும் இஸ்லாமிய அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இலாபத்துக்காக நிச்சயமாக அதை சுட்டிக்காட்டி அவர்கள் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே இருக்கின்ற ஒற்றுமையை குறைக்க தான் பார்ப்பார்கள்.
இதனை பல விடயங்களில் நாங்கள் பார்த்திருக்கிறோம் பாராளுமன்றத்திலும் சரி மேடைகளிலும் சரி சில இஸ்லாமிய தலைவர்கள் கூறுகின்ற சர்ச்சைகள் சில இஸ்லாமிய மௌலவிகள் கூட இந்து மதத்தை தமிழை கொச்சைப்படுத்தி பேசிய சம்பவங்கள் கூட நடந்து இருக்கிறது. அதற்காக ஒட்டுமொத்தமாக நாங்கள் அனைத்தும் மௌலவிகளையும் அனைத்து இஸ்லாமியர்களின் கூற முடியாது இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் அரசியல்வாதிகளாகத்தான் அதிகமாக இருப்பார்கள்.
இருந்தாலும் சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக இருப்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதும் சற்று நாங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய பாடமாக இருக்கிறது காரணம் இஸ்லாமியர்களுடைய இடத்திலே நாங்கள் இருந்திருந்தால் நிச்சயமாக ஒரு பயம் எங்களுக்கும் ஏற்படும் அதனுடைய பயன் பின்னணியின் துன்பியலான சம்பவத்தை தாண்டி சிங்களவர்களுக்கு அடுத்த தமிழர்கள் பெரும்பான்மையான இனம் இரண்டும் ஒற்றுமையாகினால் தமிழர்களிலே அதிகமானவர்கள் இந்துக்கள், சிங்களவர்களில் அதிகமானவர்கள் பௌத்தர்கள், பௌத்தத்துக்கும் இந்து மதத்துக்கும் சில ஒற்றுமைகள் இருக்கிறது. அந்த வகையிலும் அவர்கள் ஒற்றுமையாகி விட்டால் இவர்கள் புறந்தள்ள படுவார்கள் என்று ஒரு ஐயம் இஸ்லாமிய மக்களுக்கு இருக்கிறது.
நிச்சயமாக அவர்கள் அந்த ஐயம் கொள்வது தவறு இல்லை என்று தான் நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த ஐயப்பாடு அவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது அந்த ஐயப்பாடு தமிழர்கலோ அல்லது சிங்களவர்களோ இஸ்லாமியர்கள் இடத்தில் இருந்தாலும் நிச்சயமாக அந்த ஐயப்பாடு இருக்கத்தான் செய்யும்.
அந்த வகையிலே இலங்கையிலே தமிழர்கள், இஸ்லாமியர்கள், சிங்களவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். காரணம் மக்கள் ஒற்றுமையாகாமல் விட்டால் இலங்கையிலே மக்களை அரசியல்வாதிகள் அதாவது தமிழ் சிங்கள இஸ்லாமிய அரசியல்வாதிகள் ஒரு ஆட்டு மந்தைகள் போல பிரியோகித்து நிச்சயமாக அனைவரையும் பிரித்து வைத்து தாங்கள் அரசியல் வியாபாரத்தை செய்வார்களே தவிர ஒற்றுமையாக விடமாட்டார்கள் என்பது திட்டவட்டமாக கடந்து வந்த பாதையிலே நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகள் ஊடாகவும் அறியக்கூடியதாக இருக்கிறது.
அந்த வகையிலே நாங்கள் இப்பொழுது செய்ய வேண்டிய விடயம் ஆங்கிலம் தமிழ் சிங்கள மொழிகளை மூவினத்தவர்களும் அதாவது சிங்களவர்களாக இருந்தாலும் சரி தமிழர்களாக இருந்தாலும் சரி இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி மும்மொழியையும் கற்று மக்கள் ஒற்றுமையாக மக்களுடைய ஒவ்வொரு பிரச்சனைகளையும் பழைய பிரச்சினைகளை மறந்து நாங்கள் ஒற்றுமையாக மூவினமும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வோடு வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளோம்.
மக்களுடைய நன்மைக்காக மும்மொழியையும் கற்று நாங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கின்றோம்.