மியன்மாரில் சிக்கித் தவித்த 20 பேர் மீட்பு : நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!
மியான்மரில் மனித கடத்தலில் சிக்கி, இந்த வார தொடக்கத்தில் மீட்கப்பட்ட 20 இலங்கையர்கள், தாய்லாந்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்கள் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அவர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்தின் மே சோட் என்ற இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவைக் காப்பாற்றியதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, சைபர் கிரைம் நடவடிக்கைகளில் சிக்கிய மியான்மரின் மியாவாடி பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 34 இலங்கையர்களைக் கொண்ட மற்றுமொரு குழுவை விடுவிப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
திருப்பி அனுப்பும் செயல்முறைக்கு திட்டவட்டமான காலக்கெடு இல்லை என்றாலும், 20 பேரும் நலமுடன் இருப்பதாக தாய்லாந்திற்கான இலங்கைத் தூதுவர் வைஜயந்தி எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.