ஊடகம் முதல் அரசியல் வரை! உமாச்சந்திரா பிரகாஷ் வரலாறு

#SriLanka #history
Mayoorikka
1 month ago
ஊடகம் முதல் அரசியல் வரை! உமாச்சந்திரா பிரகாஷ் வரலாறு

பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஆகிய மூன்று ஊடகத்துறையிலும் முக்கிய பதவிகளில் சேவையாற்றி, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் சிறிங்கா சுதந்திர கட்சியில் தெரிவாகிய  தமிழ் பெண் உமாச்சந்திரா பிரகாஷ். 

 ஊடகத்துறையில் தன்னை ஒரு தனி ஆளுமையாக வளர்த்துக் கொண்டவர். மூன்று துறைகளிலும் உயர் பதவிகளை வகித்தவர். ஊடகத்துறை தந்த ஊக்கமும் தன்னம்பிக்கையும் தன்னை அரசியலில் ஈடுபட ஆளுமை வழங்கியதாக அவரே கூறியிருக்கின்றார். 

 இவரது சொந்த ஊர் யாழ்ப்பாணம் மட்டுவில் வடக்கு சாவகச்சேரி. முதல் நிலை பள்ளி படிப்பு மட்டுவில் சந்ரமோசா வித்தியாலயம், அதனைத் தொடர்ந்து சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார்.

 யுத்த சூழ்நிலை காரணமாக 1996ம் ஆண்டு கொழும்புக்கு இடம்பெயர வேண்டியேற்பட்டது. அதன் பின்னர் கொழும்பில் க.பொ.த. உ\த கற்றுள்ளார்.. 

பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இடம்பெயர்ந்த மாணவர்கள் என்பதால் பாடத்திட்டங்களை சரியாக பூர்த்திசெய்ய முடியாத நிலையும் அவருக்கு ஏற்பட்டது.

 அதன்பிற்பாடு முதன் முதலாக 2001ம் ஆண்டு சக்தி வானொலியில் அறிவிப்பாளராக சேர்ந்துள்ளார். அங்கு 2001--2009ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். அதன்பிற்பாடு 2009ம் ஆண்டு அங்கிருந்து விலகி செல்லும் போது மூத்த நிகழ்ச்சியாளராக இருந்துள்ளார். 

images/content-image/2024/09/1725446845.jpg

அதன் பின் 2009ம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் உதவி ஊடக முகாமையாளராக சேர்ந்தார். வீரகேசரியில் தமிழ் மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு பாரம்பரியங்கள் பற்றி அதிகமாக எழுதியுள்ளார். 

அதையே தனது குறிக்கோளாக கொண்டு முன்னெடுத்து சென்றிருந்தார். பின்னர் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் புஸ்பரத்தினத்துடன் இணைந்து தமிழர் தொல்லியல் தொடர்பான ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். 

 அந்த அனுபவங்கள் அவரை ஓர் உயர் நிலைக்கு இட்டுச் செல்ல வழியமைத்தது எனலாம். மீண்டும் 2013ம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியில் செய்தி முகாமையாளராக பதவியேற்று அதில் இரண்டு வருடங்கள் கடமை புரிந்துள்ளார். 

 அப்போது செய்திப் பிரிவிலிருந்து நிகழ்ச்சி பிரிவுக்கு மாற்றப்பட்டு . 2019 வரை சக்தி தொலைக்காட்சியில் சக்தி டிவி முகாமையாளராக கடமையாற்றியுள்ளார். அதன் பிறகு சில காலம் வீரகேசரி இணையத்தளத்தில் செய்தி ஆசிரியராக இருந்துள்ளார். 

 இரண்டு முறை சிறந்த இணையத்திற்கான விருதையும் இவர் பெற்றுக் கொண்டார். பதினாறு வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றியிருந்தார். 

அதுமாத்திரமன்றி மூன்று புத்தகங்களும் எழுதியுள்ளார்.'பெட்டகம் என்ற நூல் , கலைகேசரியில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலாக வெளிவந்தது. அடுத்து 'நல்லூர் கந்தசுவாமி பெருங் கோயில்' என்ற ஆவணப் புத்தகம் பெரும் நன்மதிப்பைப் பெற்றுத்தந்தது.

images/content-image/2024/09/1725446866.jpg

 25% பெண் பிரதிநிதித்துவ அறிமுகத்தோடு அவர் அரசியலில் பிரவேசித்திருந்தார். தமிழ் இளம் சந்ததியினருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசியலில் கால் பதித்தவர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து ஆரம்பத்தில் அரசியலில் பயணமானார்.

 இதன்காரணமாக பல விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டார். ஊழலுக்கு எதிரான அவரின் போராட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டம் எல்லா அரசியல்வாதிகளுக்கும் முன்னுதாரணமாக இருந்தது. 

 அதன்பிற்பாடு 2021 ஆம் ஆண்டு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார். அங்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் ஊடகப் பேச்சாளராக ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டிருந்தார். அதன்பிற்பாடு அவருடைய தனித்திறமையாலும் அரசியல் ஆளுமையினாலும் வடமாகாண அமைப்பாளராக நியமிக்கப்பட்டு தற்பொழுதுவரை சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகின்றார்..

images/content-image/2024/09/1725446892.jpg

அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி செயலாளர்களில் ஒருவராகவும்,ஐக்கிய மக்கள்  சக்தியின் மகளிர் பிரதித் தலைவராகவும்,எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் கடமையாற்றி வருகின்றார். 

 ஜனாதிபதித் தேர்தல் நெருங்குகின்ற நிலையில் பிரதான வேட்பாளர்களின் ஒருவரான சஜித் பிரமதாஸவின் பிரச்சாரங்களில் பெரு மூச்சாக ஈடுபட்டு வருகின்றார். 

 பல விமர்சனங்களையும் தாண்டி ஒரு பெண்ணாக இவர் அரசியலில் பல ஆளுமைகளையும் திறமையையும் வெளிப்படுத்தி வருகின்றார்.

 இவர் பல காலம் அரசியலில் இருந்து பெண்களுக்கும் இளம் சந்ததிகளுக்கும் உள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என லங்கா 4 இணையத்தளம் சார்பாக வேண்டிக் கொள்கின்றோம்.

உமா சந்திரா பிரகாஷ் தொடர்பில் ஒலி வடிவிலும் காணொளி வடிவிலும் மேலும் தகவலைகளை அறிந்துகொள்ள கீழுள்ள எமது யூரியூப் லிங்கினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!