ஜே.வி.பி தீவிரவாதிகளை அழித்த சிறீமாவோ பண்டாரநாயக்கா யார்?

#SriLanka #history
Mayoorikka
2 months ago
ஜே.வி.பி தீவிரவாதிகளை அழித்த சிறீமாவோ பண்டாரநாயக்கா யார்?

உலகில் பல பெண்கள் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருந்திருக்கிறார்கள். இப்பொழுதும் இருந்து கொண்டும் இருக்கிறார்கள். 

 பெண்கள் பதவி வகிக்க நாட்டம் காட்டாத பல இஸ்லாமிய நாடுகளிலும் கூட இப்பொழுது பெண்கள் மிகப் பெரிய பதவிகளை வகிப்பதும் கண்கூடாக காணக் கூடியதாக உள்ளது. 

 அந்தவகையில் இலங்கையிலும் பல உயர் பதவிகளில் பல நீதிபதிகள் கூட பெண்கள் பதவி வகித்து சாதனை செய்துள்ளனர். 

 யார் எப்பதவியை வகித்தாலும் நாட்டை ஆழும் பதவியில் இருந்த ஒரே குடும்ப பெண்கள் என்றால் அது அம்மா சிறீமாவோ பண்டாரநாயக்காவும், மகள் சந்திரிகா குமாரதுங்கவும் என்பது உலகறிந்த விடயமாகும். 

 இதைவிட ஒரு சிறப்பு, உலகில் முதல் பெண் பிரதமராக சிறீமாவோ பண்டார நாயக்கா இருந்தார் என்பது இலங்கை நாட்டுக்கு ஒரு பெருமை எனலாம். 

 அந்தவகையில் சிறீமாவோ பண்டாரநாயக்கா அவர்களைப் பற்றிய வரலாற்றுத் தொகுபை LANKA4 ஊடகம் தருவதில் பெருமையடைகிறது. 

 ஆம் யார் இந்த சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார்? வாருங்கள் அலசலாம். 

 உலகின் முதல் பெண் பிரதம மந்திரி, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்கள் 1960களில் இலங்கை சோஷலிச குடியரசின் பிரதம மந்திரி பதவியினை ஏற்றுக் கொண்டார். இதனால் உலகின் முதல் பெண் பிரதம மந்திரியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டார். 

images/content-image/2024/09/1725941399.jpg

இவர் ஒரு சிறந்த அரசியல்வாதி ஆவார். 1960 – 1965 , 1970 – 1977 மற்றும் 1994 – 2000 போன்ற காலகட்டத்தில் மூன்று முறை இவர் பிரதம மந்திரி பதவியில் இருந்தவர் ஆவர். கண்டிய பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்த பண்டாரநாயக்க, கத்தோலிக்க மற்றும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் கல்வி கற்றார், ஆனால் பௌத்தராக இருந்து சிங்களம் மற்றும் ஆங்கில மொழியிலே பேசினார். மேல்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றதன் பிறகு, அவர் திருமணம் செய்து குடும்பத்தை வளர்ப்பதற்கு முன், பல்வேறு சமூக நிகழ்ச்சிகளுக்காக பணியாற்றினார். 

இவர் பிரதமராக இருந்த முதல் 11 ஆண்டுகளில் அவர் இலங்கையின் வெளியுறவு அமைச்சராகவும், அணி சேரா நாடுகளின் தலைவராகவும் இருந்தார். இவருடைய ஆட்சிக்காலத்தில், அரசியல் பங்களிப்பு, இராஜதந்திரம், சர்வதேச உறவில் இவருடைய பங்கு என்பது எல்லாரும் அறிந்த ஒன்றாகும். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக பணியாற்றியவர். இவருடைய கணவன் சாலமன் பண்டாரநாயக்க கொல்லப்பட்ட பின் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

 மூன்று காலகட்டங்களில் பிரதம மந்திரியாக இருந்த இவர், 1960 – 1965 ஆம் ஆண்டு பதவியேற்று நிர்வகிக்கும் போது, இலங்கையின் முடியாக பிரித்தானிய இளவரசரே காணப்பட்டார். மேலும் ஆளுநராக ஒலிவர் குணத்திலேக்க இருந்தார். 

 பின்பு 1965 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் கட்சி தோல்வியடைந்து 1970 வரை எதிர்கட்சித் தலைவராக இருந்து கட்சியை வழிநடாத்தினார். பிறகு 1970 இல் பொதுத் தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டுச்சேர்ந்து தேர்தலில் பெரும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மீண்டும் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். 

இந்த 70-77 காலகட்டமானது பிரித்தானிய முடியின் கீழ்பட்ட ஆட்சியாகவும் இருந்தது. மற்றும் பெயரளவு ஜனாதிபதியாக வில்லியம் கொபல்லாவ பதவி வகித்து இருந்தார். இந்தக் காலகட்டத்தில் இவருடைய சமூகப்பணி எனும் போது இலங்கையின் கிராமப்புற பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார்.

images/content-image/2024/09/1725941436.jpg

 மேலும் இவரின் நிர்வாகத்தில் இவர் பிரிட்டிஷ் சோசலிச குடியரசாக இருந்த இலங்கையை, இலங்கை சோஷலிச குடியரசாக மாற்ற முயன்றார். அதாவது கல்வி, வங்கி, தொழில், ஊடகம், வர்த்தகம் போன்ற துறைகளை தேசியமயமாக்குவதினூடாக இலங்கையை ஒரு சோஷலிச குடியரசாக மாற்ற முயன்றார். அதே போல் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஆங்கிலமே இலங்கையின் நிர்வாக மொழியாக இருந்தது. ஆங்கிலத்தில் இருந்த நிர்வாக மொழியை சிங்கள மொழிக்கு மாற்றியதால் இலங்கை தமிழ் மக்களிடமிருந்து இவர் அதிருப்தியை பெற்றுக் கொண்டார்.

 எனவே 1960 -1965 மற்றும் 1970 – 1977 இவர் இரண்டு முறை பிரதமராக இருந்த கால கட்டத்தில் இலங்கை பொருளாதாரத்தை மூடிய பொருளாதாரமாக மாற்றினார். இலங்கையை ஒரு சுயபூர்த்தி நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இவர் மூடிய பொருளாதாரக் கொள்கையை இலங்கையில் கடைபிடித்தார்.

 மூடிய பொருளாதாரம் எனும் போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து நுகரப்படுகின்ற அனைத்து பொருட்களையும் கட்டுப்படுத்தி இலங்கையுடைய வர்த்தகம், கல்வி, மற்றும் இளம் கைத்தொழிலாளர்களை ஊக்குவித்து இலங்கையுடைய பொருளாதாரத்தை முன்னேற்றுவதாகும். ஆனால் இவர் கொண்டுவந்த மூடிய பொருளாதாரக் கொள்கையானது இலங்கையில் பெரியளவு பணவீக்கம், உணவுத் தட்டுப்பாடு மற்றும் தரமில்லாத ஆடைகள் என்றவாறு இலங்கையின் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் மோசமான நிலையை உருவாக்கியது. மேலும் மக்களுடைய கொள்வனவுச் சக்தியும் குறைவானதாகவே இருந்தது.

 மேலும் சிங்களத் தேசியவாதக் கொள்கை அதிகரித்ததால் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே அதிருப்தித் தன்மையும் இருந்து கொண்டே இருந்தது. எனவே இக்கால கட்டத்தில் 1972ஆம் ஆண்டில் 1ஆம் குடியரசுஅரசியலமைப்பை உருவாக்கினார்.

 மேலும் 1975ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க, இலங்கை மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகத்தை உருவாக்கினார். மேலும் இலங்கை அமைச்சரவையில் பணியாற்றும் முதல் பெண் மந்திரியை நியமித்தார்.

 அதே போல் வெளிநாடுகளில் அதிகம் பேச்சுவார்த்தை நடத்துபவராகவும், அணி சேரா நாடுகளின் தலைவராகவும் இருந்து இவர் பங்கு வகித்தார். பின்பு பொதுத் தேர்தலில் படுதோல்வி அடைந்து அந்த இடத்துக்கு 1978 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜயவர்தன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 

எனவே ஜே. ஆர் உடைய ஆட்சிக்காலத்திலிருந்து அதாவது 1980 களில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்கள், அவருடைய ஆட்சிக் காலத்தில் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக அவருடைய பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது.

 இவரை அரசாங்கத்தில் இணையவிடாமல் 7 ஆண்டுகள் தடை செய்து வைத்தனர். திரும்பவும் 1986 களில் அவர் தனது கட்சியுடன் இணைந்து கொண்டார். அந்த நேரத்தில் இந்தியாவினுடைய அமைதிப்படை இலங்கையின் அதிகாரத்தில் தலையிடுவதாகவும், மற்றும் அதிகாரத்தை மீறுவதாகவும் அவர்களுக்கு இலங்கையில் போரில் தலையிடுவதற்கான அனுமதியை எதிர்த்து நின்றனர். 

திரும்பவும் 1989 முதல் 1994 வரை சட்டமன்றத்தில் எதிர்கட்சியினுடைய தலைவராகவே இருந்து வந்தார். பிறகு 1994 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவினுடைய மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்க நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று அவருடைய ஆட்சியின் கீழ் மூன்றாவது முறையாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டார். 

2000 ஆம் ஆண்டு வரையில் ஆட்சியிலும் இருந்தார். இவர் அரசியலில் பாலின சமத்துவத்தை கொண்டு வந்த போதிலும் சட்டமன்றத்தில் பெண்களுக்கான வகிபாகமாக 25 % ஒதுக்கினார். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியதத்துவம் வகிக்கின்றனர்.

 இதுபோன்ற மேலும் பல முக்கிய சுவரசியமான செய்திகளை அறிந்துகொள்ள லங்கா 4 யூடுப் சனலை சிப்ஸ்கிரைப் பண்ணுங்கள். 

https://www.youtube.com/@Lanka4media

எமது செய்திகள் உடனடியாக கிடைக்க பெல் பட்டனையும் அழுத்தவும். அத்தோடு எமது செய்திகளை. மற்றவர்களும் பார்வையிட ஷேர் செய்யவும். 

எமது முகநூலை லைக் செய்யாதவர்கள் லைக் செய்து ஆதரவு தரவும்..

https://web.facebook.com/lanka4media

அதேபோல Tiktok 

https://www.tiktok.com/@lanka4media?lang=en

அதேபோல் எக்ஸ் பக்கத்தையும் லைக் செய்யவும் 

 Follow Lanka4 TWITTER: / lanka4media

மறக்காமல் எமது INSERGRAM ஐயும் பார்வையிடவும்.  

https://www.instagram.com/lanka4media/?hl=en

 உங்கள் ஆதரவே எமது ஊடகத்தின் உயர்வு. 

நன்றி.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!