வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 5 (October 5)
கிரிகோரியன் ஆண்டின் 278 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 279 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 87 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
610 – எராகிளியசு ஆப்பிரிக்காவில் இருந்து கான்ஸ்டண்டினோபோலை கப்பல் மூலம் அடைந்து பைசாந்தியப் பேரரசன் போக்காசை ஆட்சியில் இருந்து கவிழ்த்து பேரரசனானான்.
816 – புனித உரோமைப் பேரரசராக லூயி பயசு முடிசூடினார்.
1143–லெயோன்,காசுட்டில் மன்னர் ஏழாம் அல்பொன்சோ போர்த்துகலை ஒரு இராச்சியமாக அங்கீகரித்தார்.
1450 – பவேரியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1780–வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது.
1789–பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் பெண்கள் பதினாறாம் லூயி மன்னனுக்கு எதிராக வெர்சாய் அரண்மனை நோக்கி அணிதிரண்டு சென்றனர்.
1795 – இலங்கையின் மன்னார்ப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர்.
1799–ஆங்கிலேயரினால் பிடிக்கப்பட்ட கட்டபொம்மன் கயத்தாறு கொண்டுவரப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான்.
1838–கிழக்கு டெக்சாசில் 18 குடியேறிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1864–இந்தியாவின் கல்கத்தா நகரத்தில் இடம்பெற்ற சூறாவளி நகரை முற்றாக சேதப்படுத்தியது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
1905 – ரைட் சகோதரர்கள் 24 மைல்களை 39 நிமிடங்களில் விமானத்தில் பறந்து சாதனை படைத்தனர். 1910 – போர்த்துக்கலில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து அங்கு மன்னராட்சி முடிவுக்கு வந்து குடியரசாகியது.
1911 – கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை ஆரம்பமானது.
1915 – முதலாம் உலகப் போர்: பல்கேரியா போரில் இறங்கியது.
1930 – பிரித்தானிய வான்கப்பல் ஆர்101 தனது முதலாவது பயணத்தில் இந்தியா செல்லும் வழியில் பிரான்சில் விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்தனர்.
1938 – நாட்சி செருமனியில் யூதர்களின் கடவுச்சீட்டுகள் செல்லுபடியற்றதாக்கப்பட்டன.
1943 – இரண்டாம் உலகப் போர்: வேக் தீவில் 98 அமெரிக்கப் போர்க் கைதிகள் சப்பானியப் படைகளால் கொல்லப்பட்டனர்.
1947–பஞ்சத்தில் வாடும் ஐரோப்பியருக்காக தானியங்கள் உட்கொள்ளுதலைக் குறைக்குமாறு தொலைக்காட்சி உரையில் அரசுத்தலைவர் ட்ரூமன் அமெரிக்க மக்களைக் கேட்டுக் கொண்டார்.
1948–துருக்மெனிஸ்தான் தலைநகர் அசுகாபாத் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
1974 – இங்கிலாந்தில் ஐரியக் குடியரசு இராணுவத்தினர் மதுபான சாலை ஒன்றில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். 65 பேர் காயமடைந்தனர்.
1970–அமெரிக்காவில் பொது ஒளிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1978 – ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு கிருஷ்ணா வைகுந்தவாசன் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றினார்.
1987 – விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேர் இந்தியப் படையின் காவலில் இருக்கும்போது நஞ்சருந்தி மரணமானார்கள்.
1988–சிலியின் எதிர்க்கட்சிக் கூட்டணி அகஸ்தோ பினோசெட்டை அரசுத்தலைவர் தேர்தலில் தோற்கடித்தனர்.
1999 – மேற்கு லண்டனில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
2000 – செர்பியாவில் சிலோபதான் மிலோசேவிச்சுக்கு எதிரான மிகப் பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 2008 – கிர்கிஸ்தானில் சீன எல்லை மலைப்பகுதியில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 65 பேர் உயிரிழந்தனர்.
2011 – மேக்கொங் ஆற்றில் இரண்டு சீன சரக்குப் படகுகள் கடத்தப்பட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1524 – ராணி துர்காவதி, கோண்டுவானா அரசி (இ. 1564)
1823 – இராமலிங்க அடிகளார், இந்திய சன்மார்க்க சிந்தனையாளர் (இ. 1873)
1864 – லூயி சான், பிரான்சியத் தயாரிப்பாளர், இயக்குநர் (இ. 1948)
1882 – இராபர்ட் காடர்ட், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1945)
1889 – டிர்க் கோஸ்டர், டச்சு இயற்பியலாளர் (இ. 1950)
1889 – ஜியார்ஜியோ அபெட்டி, இத்தாலிய வானியலாளர் (இ. 1982)
1885 – அருணாசலம் மகாதேவா, இலங்கை அரசியல்வாதி (இ. 1969)
1907 – ராக்னர் நர்க்சு, எசுத்தோனிய-அமெரிக்க பொருளியலாளர் (இ. 1959)
1911 – ப. கண்ணாம்பா, தமிழ்த் திரைப்பட நடிகை (இ. 1964)
1927 – ரா. கி. ரங்கராஜன், தமிழக எழுத்தாளர், இதழாளர் (இ. 2012)
1934 – சோ, பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர் (இ. 2016)
1936 – வாக்லாவ் அவொல், செக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (இ. 2011)
1945 – ரமா பிரபா, தென்னிந்தியத் தெலுங்கு நடிகை
1946 – கோ. கேசவன் தமிழக எழுத்தாளர் (இ. 1998)
1950 – வி. வைத்தியலிங்கம், புதுச்சேரியின் அரசியல்வாதி, முன்னாள் முதலைமைச்சர்
1952 – இம்ரான் கான், பாக்கித்தானியத் துடுப்பாளர், அரசியல்வாதி
1957 – பெர்னி மாக், அமெரிக்க நடிகர் (இ. 2008)
1965 – கல்பனா, தென்னிந்திய-மலையாளத் திரைப்பட நடிகை (இ. 2016)
1975 – கேட் வின்ஸ்லெட், ஆங்கிலேய நடிகை