சாதனை படைத்த மன் மடுக்கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள்

#Mannar #students #Examination
Prasu
3 hours ago
சாதனை படைத்த மன் மடுக்கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள்

மன்னார் கல்வி வலயத்தில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக மன் மடுக்கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை காணப்படுகின்றது.

குறித்த பாடசாலையில் தரம் 1 முதல் 10 வரையிலான வகுப்புகள் மாத்திரம் காணப்பட்டது.

இதனால் சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புக்களை தெரிவு செய்ய மாணவர்கள் அயல் பாடசாலைகளான நானாட்டான் மற்றும் முருங்கன் பாடசாலைகளுக்கு பஸ்ஸிலும்,துவிச்சக்கர வண்டியிலும் சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று கல்வி கற்று வந்தனர்.

மடுக்கரை கிராமத்தை சூழ்ந்துள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பெற்றோரின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் வலயக்கல்வி அலுவலகம் கடந்த 2019 ஆம் ஆண்டு இப்பாடசாலையை கா.பொ.த.சாதாரண தரம் வரை தரம் உயர்த்தி அதற்கான வளங்களையும் வழங்கியது.

இந்த நிலையில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையில் குறித்த பாடசாலையை சேர்ந்த 11 மாணவர்கள் தோற்றினர்.

 இவர்களில் 07 மாணவர்கள் கா.பொ.த.உயர்தரத்திற்கு தெரிவாகி உள்ளதுடன்,ஒருவர் விஞ்ஞான பிரிவிற்கும்,மேலும் ஒரு மாணவர் கணித பிரிவிற்கும் தெரிவாகியுள்ளமை பாராட்டத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!