வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 13 (October 13)

#history #Lanka4 #Record #Birth
Prasu
1 month ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 13 (October 13)

கிரிகோரியன் ஆண்டின் 286 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 287 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 79 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

54 – உரோமைப் பேரரசர் குளோடியசு (படம்) நஞ்சுண்ட நிலையில் மர்மமான முறையில் இறந்தார், அவரது நான்காவது மனைவியின் மகன் நீரோ பேரரசனானார்.

1269 – வெசுட்மினிஸ்டர் மடத்தின் இன்றைய தேவாலயம் திறக்கப்பட்டது.

1307 – நூற்றுக்கணக்கான தேவாலய புனித வீரர்கள் பிரான்சில் நான்காம் பிலிப்பு மன்னரின் ஆட்களால் கைது செய்யப்பட்டனர்.

1332 – ரிஞ்சின்பால் கான், மங்கோலியரின் ககான் ஆகவும், யுவான் பேரரசனாகவும் முடிசூடினான். இவன் 53 நாட்கள் மட்டும் பதவியில் இருந்தான்.

1399 – இங்கிலாந்து மன்னர் நான்காம் என்றியின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் மடம்யில் நடைபெற்றது.

1644 – சுவீடன்-டச்சு கடற்படையினர் பெகுமாம் சமரில் டென்மார்க் கடற்படையைத் தோற்கடித்து, 1,000 இற்கும் அதிகமானோரைச் சிறைப்பிடித்தனர்.

1710 – பிரெஞ்சு அகாடியாவின் தலைநகர் போர்ட்-ரோயல் பிரித்தானியப் படைகளிடம் வீழ்ந்தது. 

1792 – வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 

1821 – மெக்சிக்கோ பேரரசு விடுதலையை பகிரங்கமாக அறிவித்தது. 

1881 – இன்றைய எபிரேய மொழியின் முதலாவது அறியப்பட்ட உரையாடல் எலியேசர் பெந்யெகுடாவினால் பதியப்பட்டது. 

1884 – அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிறீனிச்சு தெரிவு செய்யப்பட்டது.

1885 – ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. 

1892 – புகைப்படங்கள் வாயிலாக முதலாவது வால்வெள்ளியை எட்வர்ட் பார்னார்டு கண்டறிந்தார்.

1917 – யாழ்ப்பாணம் மாநகராட்சிப் பகுதி மத்திய, மேற்கு, கிழக்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.

1923 – துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் இலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது. 

1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் புதிய அரசு நேசப் படைகளுடன் இணைந்து செருமனியுடன் போர் தொடுத்தது. 

1944 – இரண்டாம் உலகப் போர்: லாத்வியாவின் தலைநகர் ரீகா சோவியத்தின் செஞ்சேனையினால் கைப்பற்றப்பட்டது. 

1953 – டட்லி சேனநாயக்கா இலங்கைப் பிரதமர் பதவியைத் துறந்தார். 

1972 – உருகுவை வான்படை விமானம் ஒன்று அந்தீசு மலைகளில் மோதியது. டிசம்பர் 23 ஆம் நாள் 45 பேர்களில் 16 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.

1972 – மாஸ்கோவுக்கு வெளியே ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 174 பேர் உயிரிழந்தனர். 

1976 – பொலிவியாவைச் சேர்ந்த போயிங் 707 சரக்கு விமானம் ஒன்று சாண்டா குரூசு நகரில் வீழ்ந்ததில் தரையில் நின்ற 97 பேர் (பெரும்பாலானோர் குழந்தைகள்) உட்பட 100 கொல்லப்பட்டனர்.

1990 – லெபனான் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. சிரியப் படைகள் லெபனானின் பல பகுதிகளைத் தாக்கின. அரசுத்தலைவர் மாளிகையில் இருந்து ஜெனரல் மைக்கேல் அவுன் வெளியேற்றப்பட்டார். 

1992 – அன்டோனொவ் விமானம் ஒன்று உக்ரைன், கீவ் நகருக்கருகில் வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 

2010 – சிலியில் நிலக்கரிச் சுரங்கம் ஏற்பட்ட விபத்தினால் 69 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிய அனைத்து 33 சுரங்கத் தொழிலாளரும் மீட்கப்பட்டனர். 

2013 – மத்தியப் பிரதேசம், ததியா மாவட்டத்தில் ரத்தன்கார் மாதா கோவிலில் நவராத்திரி நாளில் பாலம் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் 115 பேர் உயிரிழந்தனர், 110 பேர் காயமடைந்தனர். 

2014 – இலங்கையில் 1990 முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி தொடருந்து சேவை, 24 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது. 

2016 – மாலைத்தீவுகள் பொதுநலவாயத்தில் இருந்து வெளியேறுவதாக அற்வித்தது. 

பிறப்புகள் 

1884 – சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, இலங்கையில் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தியவர், அரசியல்வாதி (இ. 1969)

1908 – புதுவை சிவம், புதுச்சேரி கவிஞர், இதழாளர், நாடக ஆசிரியர் (இ. 1989) 

1910 – ஹரிவான்ஷ் லால் பூன்ஜா, இந்திய ஆன்மிகவாதி (இ. 1997)

1911 – கு. வன்னியசிங்கம், இலங்கை அரசியல்வாதி (இ. 1959) 

1911 – அசோக் குமார், இந்திய நடிகர், பாடகர் (இ. 2001) 

1925 – மார்கரெட் தாட்சர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 2013) 

1931 – காவலூர் ராஜதுரை, ஈழத்து எழுத்தாளர் (இ. 2014) 

1936 – சிட்டி பாபு, இந்திய வீணைக் கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1996) 

1936 – பொ. வே. பக்தவச்சலம், மார்க்சியவாதி (இ. 2007) 

1937 – ஏ. எச். எம். பௌசி, இலங்கை அரசியல்வாதி 

1947 – அவி லேர்னர், இசுரேலியத் திரைப்பட தயாரிப்பாளர் 

1948 – நுசுரத் பதே அலி கான், பாக்கித்தானியப் பாடகர், இசைக் கலைஞர் (இ. 1997) 

1956 – கிறிசு கார்ட்டர், அமெரிக்கத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் 

1982 – இயன் தோப், ஆத்திரேலிய நீச்சல் வீரர் 

1990 – பூஜா ஹெக்டே, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!