விருச்சிக ராசியினருக்கு விருப்பம் நிறைவேறும் நாள் - ராசிபலன்
மேஷம்:
அசுவினி: விருப்பம் நிறைவேறும் நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.கார்த்திகை 1: குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். ஒருசிலர் கோயில் வழிபாட்டில் ஈடுபடுவீர்கள்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: வழிபாட்டால் வளம் காணும் நாள். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தை விருத்தி செய்வீர். எதிர்பார்த்த வரவு வரும்.ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: பெரியோர்கள் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். கூட்டுத் தொழிலில் இருந்த தடை அகலும். எதிர்பார்த்த பணம் வரும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரம் முன்னேற்றமடையும். ஆலய வழிபாட்டில் பங்கேற்பீர்.திருவாதிரை: கவனமாக செயல்படுவீர்கள். உங்கள் தேவையில் மட்டும் கவனம் இருக்கும். பெரியோர் ஆதரவால் முயற்சி வெற்றியாகும்.புனர்பூசம் 1,2,3: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
கடகம்:
புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். பணவரவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும். பூசம்: மனக்குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.ஆயில்யம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வழக்கமான வேலைகளிலும் நிதானம் அவசியம். வெளியூர் பயணத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.
சிம்மம்:
மகம்: மகிழ்ச்சியான நாள். அமைதியாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். மனம் தெளிவாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூரம்: உங்கள் வேலைகளில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். குடும்பத்தில் இருந்த குழப்பம் மறையும். நண்பர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைவீர்.உத்திரம் 1: கூட்டுத் தொழிலில் சில நெருக்கடி தோன்றும். நண்பர்களுக்குள் மன வருத்தம் உண்டாகும். அனுசரித்துச் செல்வது நல்லது.
கன்னி:
உத்திரம் 2,3,4: நெருக்கடி விலகும் நாள். வியாபாரத்தில் போட்டியாளரால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.அஸ்தம்: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்.சித்திரை 1,2: மறைமுகமாக தொல்லை தந்தவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.
துலாம்:
சித்திரை 3,4: நெருக்கடி நீங்கும் நாள். வேலையில் இருந்த பிரச்னை தீரும். குடும்பத்தில் உண்டான குழப்பம் விலகும். வரவேண்டிய பணம் வரும்.சுவாதி: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். நிதிநிலை உயரும். குடும்ப நலனில் அதிக அக்கறை தேவை.
விருச்சிகம்:
விசாகம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். தாய்வழி உறவினரால் லாபம் தோன்றும். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர். அனுஷம்: உங்கள் முயற்சியில் கூடுதல் கவனம் தேவை. வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.கேட்டை: தொழிலில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்.
தனுசு:
மூலம்: முன்னேற்றமான நாள். உங்கள் திறமை வெளிப்படும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.பூராடம்: முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: பின் விளைவுகளை நினைத்துப்பார்த்து செயல்படுவீர்கள். வரவு அதிகரிக்கும். ஒருசிலர் உங்களை சீண்டிப் பார்ப்பர்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: வரவு அதிகரிக்கும் நாள். உங்கள் வேலையில் சங்கடம் உண்டானாலும் கடும் முயற்சியால் வெற்றி அடைவீர்.திருவோணம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.அவிட்டம் 1,2: உங்கள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். இழுபறியாக இருந்த வேலைகளை செய்து முடிப்பீர்.
கும்பம்:
அவிட்டம் 3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த தகவல் வரும். வரவை வைத்து நெருக்கடியை சரிசெய்வீர். சதயம்: உங்கள் செயலில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். நெருக்கடிக்கு ஆளாவீர். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். எதிர்பார்த்த வருவாய் வரும். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
மீனம்:
பூரட்டாதி 4: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரித்தாலும் உங்கள் முயற்சி வெற்றியாகும் நெருக்கடி நீங்கும்.உத்திரட்டாதி: அலைச்சல் அதிகரிக்கும். யோசிக்காமல் சில செயல்களை செய்து சங்கடத்திற்கு ஆளாவீர். கையிருப்பு கரையும். மனம் குழப்பமடையும்.ரேவதி: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். உங்கள் முயற்சி வெற்றியடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.